பிரபல இயக்குநர் உடல் அழுகிய நிலையில் மீட்பு… அதிர்ச்சியில் திரையுலகம்!

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2024, 11:45 am

சினிமாவில் வெற்றி தோல்வி என்பது சகஜம் தான் என்றாலும், ஒரு சிலர் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் விபரீத முடிவுகளை எடுக்கின்றனர்.

அப்படித்தான் கன்னட திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பிரபல இயக்குநரின் மறைவு. 2006ஆம் ஆண்டு மாதா என்ற படத்தை இயக்கி சினிமாவில் அறிமுகமானவர் குருபிரசாத்.

முதல் படமே சிறப்பாக அமைய, பாராட்டுக்கள் குவிந்தன, தொடர்ந்து 2009ஆம் ஆண்டு எட்டெலு மஞ்சுநாதா என்ற படத்தை இயக்கினார். படம் பெரியளவில் ஹிட் அடிக்க, சிறந்த திரைக்கதைக்கான கர்நாடக மாநில அரசின் விருதை பெற்றார்.

தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆன குருபிரசாத் சமீபத்தில் இயக்கிய ரங்கநாயகா திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது.

இதையும் படியுங்க: வேட்டையனை அடித்து நொறுக்கிய அமரன்… 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்த தோல்வியில் இருந்து மீளமுடியாமல் தவித்த குரு பிரசாத், அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கியுள்ளார். ஏராளமான கடனை வாங்கியதால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த குரு பிரசாத்துக்கு வயது 52. கடந்த 3 நாட்களாக துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தின் தகவல் படி விரைந்து வந்த போலீசார், குருபிரசாத் தூக்கிட்டு அழுகிய நிலையில் உடலை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அவர் இறந்து 3 அல்லது 4 நாட்கள் இருக்கும் என்று கூறிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.

குடியிருப்பு வாசிகளிடம் விசாரித்த போது, அவர் கடும் பண நெருக்கடியில் தவித்தது தெரியவந்தது. குரு பிரசாத் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவது ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 186

    0

    0