சினிமா துறையை பொறுத்தவரை போதை பொருள் வழக்கில் சிக்குவது தொடர் கதையாகி தான் வருகிறது. ஹிந்தியில் சுஷாந்த் சிங் மரணத்திற்கு பின் அவரது மரணத்தில் போதை பொருள் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக திடீரென்று தகவல் வெளியானது விசாரணையில் அம்பலமானது.
அதில், ஏராளமான முன்னணி நடிகைகளும் நடிகர்களும் சிக்கினர். தெலுங்கு திரையுலகில் அதேபோல் போதைப்பொருள் தலைதூக்கி உள்ளதாக தற்போது தகவல் வெளியாக இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், தயாரிப்பாளர் கே பி சவுத்ரி என்பவருக்கு தொடர்பு இருப்பது உறுதியானதையடுத்து, அவரை போலீசார் அண்மையில் கைது செய்தனர். அவருடன் ஏராளமான நடிகைகளும் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. ஜோதி மற்றும் சுரேகா வாணி ஆகியோருடன் கே பி சவுத்ரி போனில் அதிக அளவில் உரையாடியதும் விசாரணையில் அம்பலமானது. சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் சிக்கி கைதான கே பி சவுத்ரியுடன் நடிகை சுரேகா வாணியும் அவரது மகள் சுப்ரீதா ஆகியோர் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இப்படி போதை பொருள் விவகாரம் டோலிவுட்டில் சூடுபிடித்து வரும் நிலையில், பிரபல தயாரிப்பாளரான சந்திரசேகர் தனது மனைவி நமிதா போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளதாக பரபரப்பாக புகாரில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி போதைப்பொருள் வியாபாரியாக உள்ள லக்ஷ்மிஷ் பிரபு உடன் தனது மனைவி தகாத உறவு வைத்திருந்ததாகவும், ஒரு முறை இருவரும் ஒரே வீட்டில் இருந்தபோது தானே கையும் களவுமாக பிடித்ததாக சந்திரசேகர் தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், சந்திரசேகரின் மனைவி நமிதா தன் கணவர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் எனவும், அவரது நண்பர்கள் அருண், ஹேமந்த் ஆகியோர் தன்னை தாக்கியதாகவும், தன் பங்கிற்கு கணவர் மீது போலீசாரிடம் புகார் கொடுத்து இருப்பதாக நமிதா தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் திருமணமாகிய இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இருவரும் ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.