பிரபல கன்னட நடிகருக்கு புற்றுநோய் ..அடுத்தடுத்து காவு வாங்கும் டிசம்பர் மாதம்..சோகத்தில் ரசிகர்கள்..!

Author: Selvan
4 December 2024, 7:59 pm

சிவராஜ்குமாருக்கு புற்றுநோய்

பிரபலமான கன்னட நடிகர் ராஜ்குமாரின் மூத்தமகன் சிவராஜ்குமார்.இவர் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்.

Sivrajkumar cancer news

சிறிது நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.அவருக்கு என்ன பிரச்சனை,எதுக்காக அமெரிக்கா சென்றார் என திரையுலகினர் குழப்பத்தில் இருந்த நிலையில், தற்போது அவருக்கு புற்றுநோய் இருப்பதாக தகவல் வெளியாகி,ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படியுங்க: அக்காவுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த பிறந்த நாள் பரிசு.. வேற லெவல் கிப்ட் போங்க ..!

ஏற்கனவே இவருடைய சகோதரர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால்,கடந்த 2021 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.தற்போது இவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதியாகியுள்ளதால்,அவருடைய குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

Kannada actor Sivrajkumar health condition


இவர் கன்னட சினிமா மட்டுமின்றி தமிழில் வெளிவந்த ஜெயிலர்,கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.அடுத்து இவர் ஜெயிலர் 2-வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில்,தற்போது இவர் படத்தில் நடிப்பது கேள்விக்குறியாக உள்ளது.

சினிமா ரசிகர்கள் பலர் அவர் உடல்நிலை சரியாகி மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என பிரார்த்தனை பண்ணி வருகின்றனர்.

  • Tamil actress Rambha comeback ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை ரம்பா…ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ்..!
  • Views: - 121

    0

    0