தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியர் ஆக பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல் பாடி மிக சிறந்த பாடலாசிரியராக பெரும் புகழ்பெற்றிருக்கிறார். இவர் 1997 ஆம் ஆண்டு புத்தம் புது பூவே என்ற திரைப்படத்திற்கு பாடல் எழுத ஆரம்பித்தார் பிறகு பாண்டவர் பூமி திரைப்படத்தில் மிகச்சிறந்த பாடல்களை எழுதி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.
சினேகன் தொடர்ந்து சார்லி சாப்ளின், மௌனம் பேசியதே, ஏப்ரல் மாதத்தில், பகவதி, சாமி, கோவில், புதுக்கோட்டையில் இருந்து சரவணன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு மிகச்சிறந்த பாடல்களை எழுதி சிறந்த பாடல் ஆசிரியராக வலம் வந்து கொண்டிருக்கிறார் .
இதனிடையே சினேகன் பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டு பெரும் புகழ்பெற்றார். தமிழ் நடிகையான கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கன்னிகா சினேகன் இருவரும் தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதையும் படியுங்கள்: நீ எனக்கு அம்மாவே கிடையாது… வேட்டையன் ஹீரோயின் மஞ்சு வாரியரை மொத்தமா ஒதுக்கிய மகள்!
அந்த வகையில் தற்போது தற்போது கர்ப்பமாக இருக்கும் மனைவி கன்னிகாவிற்கு 5ம் மாத வளையல் விழா நடத்தி சினேகன் அழகு பார்த்திருக்கிறார். அதன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு “வரப்போகும் எங்கள் வாரிசினை வரவேற்கும் இந்த ஐந்தாம் மாத வளையல் அணியும் விழா” எனக்கூறி பதிவிட்டு இருக்கிறார் இதை அடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருவதோடு குட்டி கவிஞன் பிறக்க வாழ்த்துக்கள் என கூறி வருகிறார்கள்.