ஃபிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் கடந்த ஆண்டில் வெளியான காந்தாரா படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி பல மடங்கு லாபத்தை பெற்றது. 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான காந்தாரா படம் 400 கோடிகளுக்கு மேலாக வசூலை குவித்தது. குறைந்த பட்ஜெட் படமாக உருவாகியிருந்த இந்தப் படத்தின் வசூல் யாருமே எதிர்பார்க்காத நிலையில்,இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது.
முதல் பாகத்தை காட்டிலும் காந்தாரா 2 படத்திற்கு மிக அதிக அளவில் பட்ஜெட் ஏற்பட்டதாகவும் இந்த படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
இந்த படத்திற்காக பல வரலாற்று நிகழ்வுகளை புகுத்தி மிக பிரமாண்டமாக எடுக்க இருக்கோம் என தெரிவித்துள்ளார் . அந்த வகையில் இந்தப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை தற்போது ஹோம்பாலே நிறுவனம் அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி தசராவை முன்னிட்டு காந்தாரா சாப்டர் 1 படம் பான் இந்தியா அளவில் ரிலீசாகவுள்ளதாக தற்போது படக்குழு அறிவித்துள்ளது. ஒரு ஆண்டு கைவசம் இருக்கும் நிலையில் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டத்தை புகுத்தி வருகிறார் இயக்குநர் ரிஷப் ஷெட்டி.
அந்த வகையில் இந்த படத்தை ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றபடி கொடுப்பதற்கு இத்தனை மாத காலங்கள் தேவைப்படுவதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை திரையில் கொண்டாட ரசிகர்கள் ஒரு ஆண்டு காலம் வெயிட் பண்ண வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
நடிகையின் ஆபாச வீடியோ.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஒரு…
கோவை ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்புப் படையின் குற்றத் தடுப்பு மற்றும் கண்டறிதல் பிரிவின் சிறப்புப் படையினர், போதைப் பொருள்…
9 மாவட்டங்களில் உள்ள 315 காலிப் பணியிடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது சென்னை:…
நடிகை ரம்பா தமிழ் சினமாவை தாண்டி, தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், போஜ்புரி படங்களில் நடித்து புகழ் பெற்றார். மார்க்கெட்…
தருமபுரி மாவட்டத்திற்கு வேளாண்மை மற்றும் உழவர் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பொறுப்பு அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.…
முன்பதிவில் சாதனை படைக்கும் எம்புரான் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பிருத்விராஜ், இயக்குனராகவும் சாதித்து வருகிறார்,அந்த வகையில்…
This website uses cookies.