ஊருவிட்டு ஊருவந்து…. கரகாட்டக்காரன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் இப்போ எப்படி இருக்குனு பாருங்க – வீடியோ!

Author: Shree
11 July 2023, 1:35 pm

ரஜினி, கமலுக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் இருந்தாலும் ஒரு காலத்தில் இவர்களுக்கு போட்டியாக ஒரு நடிகர் இருந்துள்ளார் என்பதை அனைவராலும் நம்பமுடியாத உண்மை. அவருடைய போதாத காலம் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார் என்பது குறிப்பிடத்த்க்கது.

இல்லையென்றால் தற்போது ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் இடங்களில் கண்டிப்பாக அவரும் ஒரு நடிகர் இடம்பெற்றிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த காலகட்டத்தில் இவரைப் பார்த்து டாப் முன்னணி நடிகர்களே பயந்து நடுங்குவார்களாம். அந்த நடிகரின் படத்திற்கு போட்டியாக இவர்களது படம் வெளியிட்டால் கண்டிப்பாக தோல்வி நிச்சயம் தான்.

அந்த அளவுக்கு அவரின் ரசிகர்களின் பேர் ஆதரவை நடிகர் பெற்றவர் வேறு யாரும் இல்லை ராமராஜன் தான். இவரது நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, காவல்காரன் போன்ற பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து பட்டிதொட்டி எங்கும் இவரது பாடல்கள் பட்டையை கிளப்பியது. முன்னணி நடிகர்களை ஒப்பிடும்போது இவரது படங்கள் தான் அந்த காலத்தில் அதிக ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராமராஜன் நடிப்பில் 1989ல் வெளியான திரைப்படம் கரகாட்டக்காரன். இப்படம் ராமராஜனுக்கு பெரிய திருப்பமாக அமைந்தது. இந்நிலையில் இப்படம் மதுரையில் உள்ள குமராம் கிராமம் எடுக்கப்பட்டது. அதன் ஷூட்டிங் ஸ்பாட் தற்போது எப்படி இருக்கிறது என வீடியோ ஒன்று வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இதோ அந்த வீடியோ:

  • Allu Arjun Pushpa 2 Global Successடாப் கியரில் புஷ்பா 2…மெகா வசூலால் பதிலடி கொடுக்கும் அல்லு அர்ஜுன்..!
  • Views: - 642

    2

    0