பயந்து ஓடி ஒளியும் கரண்?… சினிமா கேரியரை கோட்டை விட்ட கதையை புட்டு புட்டு வைத்த பிரபலம்..!

Author: Vignesh
2 February 2024, 1:45 pm

தமிழ் சினிமாவில் நடிகர் கரண் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னாளில் டாப் ஹீரோவாக வலம் வந்தவர். உலகநாயகன் கமல்ஹாசனால், அறிமுகப்படுத்தப்பட்டு பாராட்டப்பட்ட நடிகர் கரண், ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தார்.

ஹீரோவாக வலம் வந்த நடிகர் கரண் திடீரென தன் ரூட்டை, வில்லன் பக்கம் திருப்பினார். அம்மன் சார்ந்த பக்தி படங்களில், நடிகர் கரணின் வில்லத்தனத்தை பார்த்து மிரண்ட 90’s கிட்ஸ்கள் ஏராளம் என சொல்லலாம்.

kiran - updatenews360.png 3

டாப் ரேஞ்சில் கொடிகட்டி பறந்த நடிகர் கரண், ஒரு கட்டத்தில் 42 வயது ஆண்டியை தனக்கு மேனேஜராக நியமித்து, தன்னுடைய தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டதாகவும், அந்த ஆண்டியின் கைப்பாவையாக மாற்றப்பட்ட நடிகர் கரண், தன் சினிமா குறித்த எல்லா முடிவையும் அவரை வைத்து எடுத்தது தான் அவர் கெரியரை மொத்தமாக இழந்து அடையாளம் தெரியாமல் போனதற்கு காரணம் என்றும், இதனால் பட வாய்ப்புகள் குறைந்தது என்றும் சொல்லப்பட்டது ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்று பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.

kiran - updatenews360.png 3

மேலும், பேசிய போது அவருடைய தோற்றம், கம்பீரமாகவோ, திமிராகவோ தான் பிறருக்கு தோன்றும். ஆனால், அவரோடு பழகியவர்களுக்கு தான் தெரியும். அவர் மிகவும் எளிமையானவர். எப்போதும், அன்பாக பேசுபவர் சிரித்த முகத்துடன் அனைவரிடம் பழகக் கூடியவர் என்றும், நேர்காணல் ஒன்றில் பேசுகையில் இடையில் நடிக்கும் போது, ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 300 ரூபாய் கொடுத்து விரட்டி விடுவார்கள் என்றும், பலமுறை அவமானப்படுத்தப்பட்டேன் என்று கரண் வருத்ததுடன் தெரிவித்ததாகவும்,

Cheyyaru Balu-updatenews360

கரண் ஒரு பெண் அதாவது, அந்த ஆன்ட்டியின் கட்டுப்பாட்டில் வாழ்க்கை இழந்தார் என்று கூறுவது முற்றிலும் நம்ப முடியாத ஒன்றாக இருக்கலாம். தற்போது, கரண் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். ஆன்ட்டி கட்டுப்பாட்டில் இருப்பது அதிலிருந்து மீண்டு வராமல் இருப்பதும் அவரால் தான் மார்க்கெட்டை இழந்துவிட்டார் ஓடி ஒளிந்து கொள்கிறார் என்பது போன்ற இப்படியான கிசுகிசு அப்போதைய காலங்களில் இருந்தே கரண் மீது வைக்கப்பட்டு தான் வந்தது என்றும் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 444

    0

    0