‘தரிசனம் கிடைக்குமா’… பிரபல நடிகையிடம் கேட்ட வாரிசு நடிகர்..! ஒரு வேளை அப்படி இருக்குமோ?..

Author: Vignesh
20 March 2023, 7:15 pm

பாதி கற்பனை, மீதி நிஜக்கதை என கல்கி எழுதிய நாவலை தழுவி மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தை தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். உலக அளவிலும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது பொன்னியின் செல்வன். சிலர் இப்போதே இரண்டாம் பாகத்தை வெளியிடுங்கள் என்று கூறி வருகின்றனர்.

ponniyin-selvan-updatenews360 3

இந்நிலையில், நாளுக்கு நாள் பொன்னியின் செல்வன் படத்தின் வசூலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மொத்தம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் போட்ட பணத்தை எடுத்து விட்டது.

ponniyin-selvan-updatenews360 3

இந்த படத்தின் முதல் பாகத்தின் போதே 2-ம் பாகமும் படமாக்கப்பட்டுள்ளது. 2 பாகங்களும் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் மார்ச் 20-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று லைகா நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் பட குழு தற்போது அறிவித்துள்ளது.

இந்நிலையில், ‘அக நக’ என துவங்கும் பாடலுக்காக படக்குழு வெளியிட்டுள்ள பிரத்யோக போஸ்டர் தான் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது வந்தியத்தேவனான கார்த்தி, குந்தவையான திரிஷா முன்பு மண்டியிட்டுள்ளது போன்று இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ps 2 - updatenews360

இதனிடையே பொன்னியின் செல்வனில் நடித்து இருக்கும் கார்த்தி மற்றும் த்ரிஷா இருவரும் ட்விட்டரில் உரையாடி இருக்கின்றனர். ‘உங்க தரிசனம் கிடைக்குமா’ என கார்த்தி கேட்ட டுவிட்டிற்கு நடிகை த்ரிஷா என்ன வாணர்குல இளவரசே? என கேட்டது வைரலாகி வருகிறது.

  • ajith kumar and sivakarthikeyan on csk vs srh match அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!