கார்த்தியின் மகளா இது…? பார்த்த சீக்கிரத்தில் பாப்பா வளர்ந்திட்டாங்களே – வைரல் போட்டோ!
Author: Shree8 July 2023, 11:01 am
சூர்யாவின் தம்பி சிவகுமாரின் இளைய மகன் என சினிமாவில் அறிமுகம் ஆகும்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளிடையில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் நடிகர் கார்த்தி. இவர் தமிழில் 2007ஆம் ஆண்டு வெளியான பருத்தி வீரன் திரைப்படத்தில் பயங்கரமான நடிப்பை வெளிப்படுத்தி மிரளவைத்தார். அறிமுக நாயகனாக இப்படி நடிக்கிறாரே என ஒட்டுமொத்த திரை விரும்பிகளும் வவியந்துவிட்டார்.
கார்த்தி நடித்த முதல் திரைப்படமே மாபெரும் ஹிட் அடித்ததால். அடுத்து 2010 ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்த படமும் மெகா ஹிட் அடித்தது தொடர்ந்து பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகு ராஜா, மெட்ராஸ், கொம்பன், தோழா, காற்று வெளியிடை, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், தேவ், கைதி, சுல்தான் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக இடம் பிடித்தார்.
கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்தினார். நடிகர் கார்த்தி தம்மனாவை பையா படத்தில் நடித்த போது காதலித்து அவரை பிரிந்துவிட்டார். அதன் பின்னர் பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணான ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு உமையாள் என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் மகளின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி செம வைரலாகியுள்ளது. கார்த்தியின் மகளா இது பார்த்த கீக்கிரத்தில் இப்படி வளர்ந்திட்டாரேப்பா என ஆச்சர்யத்துடன் லைக்ஸ் குவித்துள்ளனர்.