படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!
Author: Selvan3 March 2025, 9:56 pm
‘சர்தார் 2’ படப்பிடிப்பு நிறுத்தம்
பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி வந்தார்.அவருடைய சமீபத்திய படங்கள் ‘ஜப்பான்’ மற்றும் ‘மெய்யழகன்’ எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை,இதையடுத்து,தற்போது ‘வா வாத்தியார்’ மற்றும் ‘சர்தார் 2’ படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இதையும் படியுங்க: படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!
இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் 2022ல் வெளியான ‘சர்தார்’ திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது,இதன் தொடர்ச்சியாக, சர்தார் 2 படப்பிடிப்பு தற்போது மைசூரில் நடைபெற்று வந்தது.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார்,மேலும் மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன்,பாபு ஆண்டனி,ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மைசூரில் படமாக்கப்பட்ட கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் மிகவும் ஆக்ஷன் நிறைந்ததாக எடுக்கப்பட்டு வருகிறது,அப்போது எதிர்பாராத விதமாக கார்த்திக்கு காலில் காயம் ஏற்பட்டு வீக்கம் ஆகியுள்ளது,இதனால் மருத்துவர்கள் ஒரு வாரம் முழுமையான ஓய்வு வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர்.
இதன்காரணமாக படக்குழுவினர் சர்தார் 2 படப்பிடிப்பை ரத்து செய்து சென்னை திரும்பியுள்ளனர்,ஒரு வாரம் கழித்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.