அண்ணியின் Workout பார்த்து அசந்து போய் கமெண்ட் செய்த கார்த்தி – ஜோதிகாவின் நச் ரிப்ளை!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஜோதிகாச 90ஸ் காலகட்டத்தின் முடிவில் நடிக்க வந்து 2000களில் டாப் நடிகையாக கொடிகட்டி பறந்தார். இந்தி திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கிய ஜோதிகா, வாலி திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, பூவெல்லாம் கேட்டுப்பார், குஷி, முகவரி என டாப் ஹீரோக்களுடன் தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக மாறினார். விஜய், அஜித், கமல்ஹாசன், ரஜினி என டாப் ஹீரோக்கள் ஜோடியாக நடித்து கனவு தேவதையாக மாறினார்.

சந்திரமுகி படத்தில் ஜோதிகாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதனிடையே, நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலம் முதல் சில திரைப்படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் காதல் கொண்ட நடிகர் சூர்யாவுடன் காதலில் விழுந்தார். பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர், சில்லுனு ஒரு காதல் போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்தனர்.

இருவீட்டாரின் சம்மதம் பெற்று திருமணம் செய்த இந்த நட்சத்திர தம்பதிக்கு தேவ் மற்றும் தியா என்ற குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு, படங்களில் நடிக்காமல் இருந்து வந்த பல வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2015ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு, ராட்சசி, தம்பி, உடன்பிறப்பே போன்ற படங்களில் பெரும்பாலும் குடும்ப பாங்கான ரோல் மட்டும் ஏற்று நடித்தார் ஜோதிகா. தொடர்ந்து தற்போது இந்தி படங்களில் நடிக்க முயற்சித்து சூர்யாவுடன் மும்பையில் சென்று செட்டில் ஆகிவிட்டார்.

அங்குள்ள ஜிம்மில் மிக கடுமையான உடற்பயிற்சி செய்துவரும் ஜோதிகா அந்த வீடியோவை சோஷியல் மீடியால் பதிவிட அது செம வைரலாகி வருகிறது. இதை பார்த்து டிடி, ரம்யா போன்ற பிரபலங்கள் ஆர்ச்சர்யத்துடன் அவரை பாராட்டி கமெண்ட்ஸ் செய்துள்ள நிலையில், நடிகரும் ஜோதிகாவின் மைத்துனருமான கார்த்தி ‘ சரியான பீஸ்ட் மோட் அண்ணி’ என்று கமண்ட் செய்துள்ளார். இதற்கு ஜோதிகா ‘நன்றி கார்த்தி. இந்த நிலைமைக்கு வர 10 மாதங்கள் ஆனது’ என்று பதிலளித்துள்ளார். இந்த கமெண்ட்ஸ் இணையத்தில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Ramya Shree

Recent Posts

திமுகவுக்கு ‘இது’தான் முக்கியமானது.. கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி!

திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…

3 minutes ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…

36 minutes ago

மாயமான +2 மாணவியை பொதுத் தேர்வு எழுத வைத்த காவலர்… நெகிழ வைத்த கோவை சம்பவம்!

கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…

38 minutes ago

துரோகம் செய்தாரா ராஷ்மிகா? காங்கிரஸ் எம்எல்ஏ மிரட்டல்.. என்ன நடந்தது?

ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…

2 hours ago

விஜய் முதல்ல ’அத’ பண்ணட்டும்.. விஷால் ட்விஸ்ட் பேச்சு!

நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…

2 hours ago

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

13 hours ago

This website uses cookies.