கார்த்தி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய பிரபல நடிகை – கோபத்தில் கொந்தளித்த மனைவி!
Author: Shree21 April 2023, 4:13 pm
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகிய பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி மாபெரும் வரலாற்று வெற்றி படமாக அமைந்தது. கல்கி எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராய் பச்சனும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். இப்படத்தின் ப்ரோமோஷனில் இவர்கள் அனைவரும் தீவிரமாக பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில் வந்தியத்தேவன் கேரக்டர் குறித்தும் திரிஷாவிடம் வழிந்து “உயிர் உங்களுடையது தேவி” என அவர் பேசும் அந்த ஹிட் வசனத்தை குறித்து கார்த்தியின் மனைவி என்ன கூறினார் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கார்த்தி, ரொமான்ஸ் இல்லாத கதையே நீங்க நடிக்கமாட்டீங்களா? ரொமான்ஸ் இல்லாத வாழ்க்கை போர் அடிக்குமா? என சொல்லி சமாளிப்பேன்? அதுக்கு அவங்க வீட்ல மட்டும் தான் ரொமான்ஸ் வரமாட்டேங்குதுன்னு சொல்லுவாங்க. அது மட்டுமல்லாமல், இந்த படத்தில் வந்தியத்தேவன் எல்லோரையும் பார்த்து ஜொள்ளுவிடுறான் ஆனால், ரொம்ப கண்ணியமா இருக்கிறான் என சொன்னாங்க அது ரொம்ப பெரிய வார்த்தை என கூறினார். இதோ அந்த வீடியோ: