வாழ்த்துக்கள் அண்ணே! வேட்டி சட்டையில் வாழ்த்து சொன்ன தம்பி;

Author: Sudha
23 July 2024, 11:18 am

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா இன்று தனது 49 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.அவருக்கு ரசிகர்களும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நேருக்கு நேர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யா பிறகு தன்னுடைய உழைப்பாலும் திறமையாலும் நிறைய கடினமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துப் புகழ்பெற்றார்.

சூர்யா தன் நடிப்புத் திறமையால் மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகள், நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், இரண்டு எடிசன் விருதுகள், போன்றவற்றை வென்றுள்ளார்.இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்கள் 100 பட்டியலில் சூர்யா ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவிற்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார் அவருடைய தம்பி கார்த்தி அதில்

திரை வாழ்வை பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கினாலும் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் எதையும் கற்று சாதிக்க முடியும் என்று எனக்குக் கற்றுத் தந்தவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.சமூகத்தில் அன்பை பரப்பும் அன்பான ரசிகர்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.இந்த பதிவில் ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!