Direct-ஆ வந்து Adjustment-க்கு கூப்பிட்டாங்க.. கதறிய ‘கார்த்திகை தீபம்’ சீரியல் நடிகை..!

Author: Vignesh
3 March 2023, 11:30 am

செம்பருத்தி சீரியல் மூலமாக புகழடைந்த கார்த்திக் ராஜ் தற்போது நடித்து வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபாவாக நடித்து வரும் ஆர்த்திகா சினிமாவில் தன் அனுபவித்த கொடுமைகள் குறித்து தற்போது மனம்விட்டு வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

karthigai deepam serial - updatenews360

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்று கார்த்திகை தீபம் சீரியல். இது ஆரம்பித்த சிறிது நாட்களிலேயே கார்த்திகை தீபம் சீரியலின் டிஆர்பி, எதிர்பாராத ரீச் ஆகிவிட்டது.

தற்போது இந்த சீரியலில் செம்பருத்தி சீரியலில் ஹீரோவாக நடித்த கார்த்திக் ராஜ் நடித்து வருகிறார். கார்த்திக் ராஜ்க்கு ஜோடியாக தீபா என்ற கேரக்டரில், நடிகை ஆர்த்திகா நடித்து வருகிறார்.

karthigai deepam serial - updatenews360

தற்போது ஆர்திகா, தன் சினிமா வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்ய வருவோர், அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் இருக்கும் என வெளிப்படையாக கேட்டதாகவும், மேலும், உங்களுக்கு இது ஓகே தானே என கேட்பார்கள் என்றும், அவர்களிடம் நான் சொல்லும் பதில் இதுதான், சினிமா மட்டும் தான் தனக்கு வாழ்க்கை என்று கிடையாது என்றும், இந்த உலகத்தில் தான் என்ன வேலை செஞ்சாலும் பொழச்சுக்குவேன் என தெரிவித்துள்ளார்.

karthigai deepam serial - updatenews360

ஆனால், படத்துக்காகவோ, பணத்துக்காகவோ தன் வாழ்க்கையை அடமானம் வைக்க மாட்டேன் என்றும், இந்த மாதிரி எண்ணத்தோடு தன் பக்கத்துல வராதீங்க என கண்டிப்பாக சொல்லியதாக தெரிவித்துள்ளார்.

  • Chennai 28 part 3 விரக்தியில் வெங்கட் பிரபு எடுத்த முடிவு…சாதகமாக அமையுமா..!