முத்தம் கொடுத்ததில் பிடித்த ஹீரோயின்… அவங்கள பார்த்து கார்த்திக் பொசுக்குன்னு சொல்லிட்டாரே..!
Author: Vignesh17 May 2024, 5:01 pm
தமிழ் சினிமாவின் நவரச நாயகன்…ஆண்களே காதல் கொள்ளும் ஆணழகன் என்றெல்லாம் புகழப்பட்டவர் தான் நடிகர் கார்த்திக். இவர் 1988ம் ஆண்டு ராகினி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு பிறந்த பிள்ளை தான் கெளதம் கார்த்திக்.
மேலும் படிக்க: இறப்புக்கு முன் பவதாரிணி செய்த சேவை.. – அமைச்சர் அன்பில் மகேஷ் பகிர்ந்த வீடியோ..!
பின்னர் முதல் மனைவி ராகினியை பிரிந்துவிட்டு அவரின் சகோதரி ரதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு பிறந்த பிள்ளைகள் தான் கைன் கார்த்திக், திறன் கார்த்திக். ஆம், மனைவி ராகினி உடனான வாழ்க்கையை 4 வருடத்தில் முடிவுக்கு கொண்டுவந்துவிட்டார். அதன் பின்னர் ரதி என்பவரை 1992ம் ஆண்டு மறுமணம் செய்துக்கொண்டார்.
மேலும் படிக்க: OVER டார்ச்சர்.. ஜிவி பிரகாஷ் விவாகரத்துக்கு அந்த நபர் காரணம்?.. பகீர் கிளப்பும் பத்திரிகையாளர்..!
இந்நிலையில், முன்னதாக கார்த்திக் சினிமா வாழ்க்கையை தாண்டி நிஜ வாழ்க்கையில் பல ஹீரோயின்களுடன் கிசுகிசுக்கப்பட்டார். இந்த நிலையில், கார்த்திக் பேசிய ஒரு பழைய வீடியோ ஒன்று தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் நீங்கள் முத்தம் கொடுத்ததில் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த, கார்த்திக் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் நடித்த நடிகை ராதாவுக்கு தான் முதன் முதலில் முத்தம் கொடுத்தேன். அவருக்கு தாமரை மலரை கையில் கொடுத்து வயிற்றில் முத்தம் கொடுக்க சொன்னார் பாரதிராஜா. அதுதான் உங்கள் கேள்விக்கு பதில் என்று கார்த்திக் தெரிவித்திருந்தார்.