கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி!
நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பேசப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்க: நினைச்ச மாதிரி வரல…கடந்து போய் தான் ஆகணும்…ஜி வி பிரகாஷ் உருக்கம்.!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஜெயிலர்,இப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது,கூலி படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க,இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்,இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா,சத்யராஜ்,ஸ்ருதி ஹாசன்,சோப்பின் சபீர்,உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.மேலும்,நடிகை பூஜா ஹெக்டே இப்படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில்,தற்போது அவரின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல் கிடைத்துள்ளது.அதன்படி,ரஜினியின் அடுத்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்,இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் ‘பேட்ட’ படத்திற்குப் பிறகு மீண்டும் ரஜினி – கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி இணையவுள்ளது,இதனால் ரஜினி ரசிகர்களுக்கு அடுத்தடுத்து தரமான ட்ரீட் காத்திருக்கிறது.