தமிழ் சினிமாவில் 80களில் இருந்து முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ராதா நாயர். இயக்குனர் இமயம் பாரதிராஜாவால் அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகையாக திகழ்ந்து அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு, மொழிப்படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வந்தார்.
இதனையடுத்து 1991ல் ராஜசேகரன் என்பவரை திருமணம் செய்து கார்த்திகா நாயர், துளசி நாயர் என்ற இரு பெண்களை பெற்றெடுத்தார். சினிமாவில் இருந்து விலகிய ராதா, தன் இரு மகள்களையும் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். மூத்த மகள் ஒருசில வெற்றிப்படங்களை நடித்து வந்த நிலையில் இரண்டாம் மகள் துளசியை மணிரத்னமின் கடல் படத்தில் நடிக்க வைத்தார்.
நல்ல அறிமுகம் கிடைத்தாலும் தற்போது இரண்டு மகள்களும் வாய்பில்லால் இருக்கின்றனர். அந்தவகையில் மூத்த மகள் கார்த்திகா சில வருடங்களாக நடிப்பு பக்கமே வராமல் சொந்தமாக தொழில் நடத்தி அதை கவனித்து வந்தார். இந்நிலையில் தனது வாழ்வின் அடுத்தகட்டமாக ரோஹித் மேனன் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
சமீபத்தில் திருவனந்தபுரத்தில் கேரள முறைப்படி மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்ற இத்திருமணத்தில் திரை நட்சத்திரங்கள் பலர் கலந்துக்கொண்டனர். திருமணத்தில் நடிகை ராதா தன் மகளுக்கு கை, கழுத்து, கால் என அடுக்கடுக்காக கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிவித்து, தங்க இழையால் ஆன பட்டுப்புடவை அணிவித்து ஜொலிஜொலிக்க திருமணம் செய்துள்ளார்.
பிரமாண்டமாக நடந்த திருமணம் 5 ஸ்டார் ஹோட்டல் என்று பல கோடி செலவில் நடைபெற்றது. சினிமாவில், ராதாவும் அவரது கணவரும் சேர்த்து வைத்த சொத்து நட்சத்திர ஓட்டலில் முதலீடு செய்து வைத்து பல இடங்களில் நிலமாக வாங்கியும் குவித்துள்ளனர். இதனால் முதல் மகள் திருமணத்திற்காக 500 சவரன் நகை விலையுயர்ந்த கார் என்று வரதட்சணையாக கொடுத்துள்ளாராம் ராதா. கார்த்திகா திருமணம் செய்துள்ள அவரது கணவருடைய சொத்து மட்டும் 500 கோடி இருக்கும் என்று பயில்வான் ரங்கநாதன் கூறி ஷாக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு தேனிலவு சென்றுள்ள கார்த்திகை நாயர், காதலர்களின் கனவு தேசமான பாரிஸில் தங்களது ஹனிமூனை கழித்து வருகிறார்கள். அங்கு பேமஸ் ஆன ஈஃபிள் டவர் உள்ளிட்ட பகுதிகளில் படு ரொமான்டிக் மூடில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இந்த காதல் ஜோடி திரைப்படத்தையே மிஞ்சிவிட்டதாக கூறி வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.