அந்த படத்தின் வெற்றியை வேறலெவலில் கொண்டாடிய கார்த்தி..! படக்குழுவினருக்கு விலையுயர்ந்த பரிசு வழங்கல்.. அப்படி என்ன கொடுத்தார் தெரியுமா?

Author: Vignesh
7 December 2022, 2:57 pm

நடிகர் கார்த்தி சர்தார் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சக்சஸ் பார்ட்டி ஒன்றை கொடுத்துள்ள, அதில் படக்குழுவினருக்கு விலையுயர்ந்த பரிசு ஒன்றையும் வழங்கி உள்ளார்.

நடிகர் கார்த்தியின் கெரியரில் 2022 ஆண்டு மறக்க முடியாத அமைந்துள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு அவர் நடிப்பில் விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகின. இந்த மூன்று திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்டாகின. இந்த ஆண்டு ஹாட்ரிக் ஹிட் கிடைத்ததால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார் கார்த்தி.

இந்த மூன்று படங்களில் பொன்னியின் செல்வன் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தாலும், அது கார்த்தி சோலோ ஹீரோவாக நடித்த படமில்லை. அப்படி அவர் சோலா ஹீரோவாக நடித்த சர்தார் படம் கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆனது. சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்துக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக இருந்தது.

பிரின்ஸ் படம் படுதோல்வி அடைந்ததால் இந்த வருட தீபாவளி ரேஸில் சர்தார் படம் அமோக வெற்றியை பெற்றது. பி.எஸ்.மித்ரன் இயக்கிய இப்படத்தில் கார்த்தி தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில், இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சக்சஸ் பார்ட்டி ஒன்றை கொடுத்துள்ளார் கார்த்தி. அதில் படக்குழுவினரும் அவர் அளித்த கிஃப்ட் தான் தற்போது கோலிவுட்டில் பேசு பொருளாக உள்ளது.

karthi - updatenews360

சர்தார் படம் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரால் வரும் ஆபத்துகளை பற்றி பேசி இருந்தது. இதன் காரணமாகவே இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட பிளாஸ்டிக் பாட்டிலை தவிர்த்து கண்ணாடி பாட்டிலில் தண்ணீரை வழங்கி இருந்தனர்.

தற்போது படத்தில் பணியாற்றிய அனைவருக்கு ரூ.30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தண்ணீர் பாட்டிலை பரிசாக வழங்கி உள்ளார் கார்த்தி. அதில் என்ன ஸ்பெஷல் என்றால் அந்த பாட்டில் வெள்ளியால் ஆனதாம். கார்த்தி அளித்த இந்த விலையுயர்ந்த பரிசின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகின்றன. கார்த்தியின் இந்த செயலுக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்