கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக ஜப்பான் திரைப்படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக 96 பிரேம் இயக்கும் மெய்யழகன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மெய்யழகன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸ் என அதிகார பூர்வமாக திரைக்குழு தெரிவித்துள்ளது.

கார்த்தி அடுத்ததாக கைதி 2, சர்தார் 2 ஆகிய படங்களில் நடிக்கவிருக்கிறார். இந்த இரண்டு படங்களின் முதல் பாகம் பெரும் வெற்றி பெற்றதால் இந்தப் படத்தின் மீதும் கார்த்தி ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். மேலும் நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்யாரே, டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்திலும் ஒரு படத்தில் அவர் நடிக்கிறார்.இப்படி டாப் கியரில் போய்க்கொண்டு இருக்கிறது கார்த்தியின் திரைப் பயணம்.