“ஜெயிலர் படத்தை பார்த்த எனக்கும் ஒரு சொகுசு கார் பரிசு கொடுத்திருக்கணும்” – அரசியல் பிரபலம் சர்ச்சை பதிவு!
Author: Shree9 September 2023, 10:32 am
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், சுனில், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார், அண்ணாத்த படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தனர். இதனால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்த்ததை போலவே உலகம் முழுவதும் வெளியான ஜெயிலர் படத்திற்கு, நல்ல வரவேற்பு கிடைத்துது. இதுவரை இப்படம் சுமார் 600 கோடிக்கும் அதிமான வசூல் ஈட்டி சாதனை படைத்தது. இந்நிலையில் இப்படத்தை பார்த்த எம்.பி. ஜெயிலர் படத்தை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்விட் செய்துள்ளார்.
அந்த பதிவில், ” நேற்று இரவு ஒரு தமிழ் திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பார்த்ததற்கு படத்தின் தயாரிப்பாளர் எனக்கு சொகுசு காரை பரிசளித்திருக்கவேண்டும் என ஜெயிலர் படத்தையும் தயாரிப்பாளர் கலாநிதி மாறனையும் கிண்டலடித்து பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்ஸ் சிலர், அவர் சொல்வது சரி தான் படம் இன்னும் வசூலிக்கவேண்டும் என நோக்கத்தில் தான் இந்த பரிசு சலுகைகள் கூட நெல்சன், ரஜினி , அனிருத் உள்ளிட்டோருக்கு அடுத்தடுத்து சொகுசு கார்கள் கொடுத்து படம் பார்க்க விரும்பாதவர்களை கூட படம் பார்க்க இழுத்தார்கள் என கூறி வருகின்றனர்.