ஜி பி முத்து ‘இத மட்டும் பண்ணலனா அவ்ளோ தான்’.. அப்புறம் பவர் ஸ்டார் மாதிரி காணாம போயிடுவார்” பிரபல இயக்குனர் அட்வைஸ்..!

இயக்குனர் கருபழனியப்பான் ஜி பி முத்துவின் எதிர்காலம் குறித்து கூறி இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

டிக் டாக் ரசிகர்களுக்கு ”டிக்டாக் நண்பர்களே” என்ற வார்த்தையை கேட்டதும் நினைவிற்கு வருவது ஜி பி முத்து தான். ஜி பி முத்து தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர். இவர் 3 – ம் வகுப்பு வரைக்கும் தான் படித்து இருக்கிறார். ஜி பி முத்துவின் நெல்லை பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

ஜி பி முத்து யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று எல்லா சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானார். அதிலும் யூடுயூப்சேனலில் இவர் பதிவிடும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் என்று சொல்லலாம். ஸ்டூடியோ கிடையாது , கவர்ச்சி புகைப்படம் கிடையாது, எடிட் கிடையாது , வித விதமான துணி கிடையாது, பார்வையாளர்களை சப்ஸ்கிரைப் செய்ய சொல்வது கிடையாது, இருப்பினும் வேகமாக வளரும் ஜி பி முத்து யூடுயூப் சேனல் .

மேலும், யூடுயூபில் ஜி பி முத்துவுக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து தான் இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து இருந்தது. அதோடு ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்கள் கண்ணும் இவர் மீது தான் இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து கலக்கி கொண்டு இருந்தார். இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிகமான ரசிகர்களை கொண்டது ஜி பி முத்து தான்.

ஆனால், ஜி பி முத்து குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இது பிக்பாஸ் ரசிகர்கள் பலருக்குமே ஷாக்கை கொடுத்திருக்கிறது. மேலும், இவர் பிக் பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட 14 நாட்கள் இருந்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முன்பிருந்ததை விட அதிகமாக இவருக்கு ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. மேலும், ஜி பி முத்து திரைபடங்களிலும் நடித்து வருகிறார்.

ஜி பி முத்து, சன்னி லியோனுடன் இணைந்து ‘Oh My Ghosh’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். காமெடி நடிகர் சதீஷ், குக்கு வித் கோமாளி தர்ஷா உள்ளிட்டோர் ‘Oh My Ghosh’ படத்தில் நடித்து இருக்கிறார்கள். கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. மேலும், ஜி பி முத்து அஜித்தின் துணிவு படத்திலும் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் கருபழனியப்பன், ஜி பி முத்துவின் எதிர்காலம் குறித்து தெரிவித்து இருக்கிறார்.

அதில் பேசிய இயக்குனர் கருபழனியப்பன், ‘ஜி பி முத்து என்ன செய்தாலும் அனைவரும் சிரிக்கிறார்கள். ஜி பி முத்து ஏதோ ஒரு வகையில் அனைவரையும் என்டர்டைன் செய்து கொண்டிருக்கிறார். பிக் பாஸ் கூட அவரது முதல் கிளிப் தான் வைரல். ஆனால், ஜிபி முத்து இப்படியே இருந்து விடுவாரா வைரல் ஆகி விடுவாரா என்றால் அது இல்லை. அவர் அடுத்த திறமையை வளர்த்துக் கொண்டால் ஜிபி முத்து பிரபலத்தில் இருந்து புகழுக்கு சென்று விடுவார். ஆனால், இதை மட்டும் ஜிபி முத்து செய்து வந்தால் டாக்டர் சீனுவாசன் மாதிரி அப்படியே கரைந்து விடுவார்’ என தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

10 hours ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

10 hours ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

12 hours ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

12 hours ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

12 hours ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

12 hours ago

This website uses cookies.