கரு பழனியப்பனின் பூர்வீகம் காரைக்குடி; அப்பா சின்ன கருப்பைய்யா, அம்மா நாகம்மை.புத்தகம் என்றால் கரு பழனியப்பனுக்கு சிறு வயதில் இருந்தே கொள்ளை பிரியம். கண்ணதாசன், ஜெயகாந்தன், அசோகமித்திரன் உள்ளிட்ட பிரபல கதை ஆசிரியர்கள் அப்போதே அவருக்கு அறிமுகமாகி விட்டனர்.
மதுரை செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் பள்ளியில் பள்ளிபடிப்பை முடித்தவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பயின்றார். தொடர்ந்து மதுரை தியாகராஜா கல்லூரியில் முதுகலை பட்டத்தையும் முடித்தார்.புத்தக வாசிப்பும், தொடர்ந்து படங்களை பார்த்தலும் கரு பழனியப்பனை சினிமாவின் பக்கம் அழைத்து வந்தது.
1994 ஆம் ஆண்டு திரைத்துறைக்குள் நுழைந்த கரு பழனியப்பன் இயக்குநர் பார்த்திபனுடன் ‘அவர் புள்ள குட்டிகாரன்’, ‘ஹவுஸ் ஃபுல்’ ஆகிய படங்களில் பணியாற்றினார். தொடர்ந்து இயக்குநர் எழிலிடம் சேர்ந்த பழனியப்பன் ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பெண்ணின் மனதைத் தொட்டு’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார்.
.2003 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் மற்றும் சினேகா நடித்த ‘பார்த்திபன் கனவு’ படத்தை இயக்கி திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமானார். விமர்சகர்களிடம் இருந்து பாராட்டை பெற்ற இந்தப்படத்திற்காக மாநில அரசின் சிறந்த இயக்குநர் விருதும் அவருக்கு கிடைத்தது.
தொடர்ந்து சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், சதுரங்கம், மந்திரப்புன்னகை படத்தை இயக்கினார். இதில் மந்திரப் புன்னகை படத்தில் இயக்குநர் மட்டுமல்லாமல் நடிகராகவும் நடித்தார்.
இவரது மேடை பேச்சுகளும், பேட்டிகளும் மக்களிடம் பிரபலமான நிலையில், பிற நடிகர்களின் படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்தது. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
ஜீ தமிழின் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த நிகழ்ச்சி இவரை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.
இந்த நிலையில் 4 வருடமாக அந்த நிகழ்ச்சியை நடத்தி வந்த கரு பழனியப்பன், சமூகநீதி,சுயமரியாதை,திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது! நன்றி என பதவிட்டுள்ளார்.
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.