“கூப்பிடுறது அவன் விருப்பம்… போறது உன் இஷ்டம்” Adjustment குறித்து கருணாஸ் அதிர்ச்சி பதில்!

Author:
22 August 2024, 6:06 pm

கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகையான பாவனா படப்பிடிப்பு தளத்தில் சூட்டிங் முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தபோது நள்ளிரவில் காரில் கடத்தப்பட்டு மர்ம நபர்களால் பாலியல் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையே அதிர வைத்தது. இதன் பின்னர் நடந்த விசாரணையில் மலையாள நடிகர் திலீப்பின் தூண்டுதலின் பெயரில் தான் இந்த பலாத்கார சம்பவம் நடைபெற்றதாக தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை கிளப்பியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கேரள நடிகைகள் மற்றும் சினிமா பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் ஒன்று கூடி தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை குறித்து விசாரிக்க விசாரணை குழு ஒன்றை அமைக்க வேண்டும் என நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் ஒன்றை கேரள அரசு நியமித்தது. இதை அடுத்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 233 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிட்டி அறிக்கையை நேற்று கேரளா அரசு வெளியிட்டிருந்தது.

அதில் பல நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை குறித்தும் நடிகர்களால் தாங்கள் படும் அவதிகளை குறித்தும் கூறி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 50 பேரின் வாக்குமூலத்தின் படி இந்த அறிக்கை தயாராகியுள்ளது. அதில் 15 ஆண் பிரபலங்களின் பிடியில் மலையாள சினிமா சிக்கிக் கொண்டிருக்கிறது என கூறப்படுகிறது.

sanam shetty -updatenews360

இதே போல் தமிழ் சினிமாவிலும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது என்று நடிகை சனம் செட்டி பேட்டி கொடுத்திருந்தார். என்னை யாராவது அட்ஜஸ்ட்மென்ட்டிற்கு அழைத்தால் செருப்பாலயே அடிப்பேன் என்று முகத்திற்கு நேராகவே கூறிவிட்டு போனை வைப்பேன் என கூறியிருக்கிறார் சனம் ஷெட்டி.

இப்படியாக இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சமயத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நடிகர் சங்க துணைத் தலைவருமாக நடிகர் கருணாஸ் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகளை நடிகைகள் எதிர்கொள்வது பற்றிய கேள்விக்கு அதிர்ச்சுக்குள்ளாகும் வகையில் பதில் அளித்திருக்கிறார்.

அதாவது அட்ஜஸ்ட்மென்ட் என்பது சினிமாவில் மட்டும்தான் நடக்குது அப்படின்னு உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா? இந்த சமூகத்தில் வேற எங்கேயும் நடக்கவே இல்லையா? இது எல்லாத் துறையிலும் நடக்குது. அது சம்பந்தப்பட்ட ரெண்டு பேர் பத்தின விஷயம். அது அவங்களோட தனிப்பட்ட விஷயம் எனவே யாரோட விருப்பமும் இல்லாமல் இங்கு எதுவுமே நடப்பதில்லை.

நான் வெளியூரில் இருந்ததால் ஹேமா கமிஷன் அறிக்கை பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. அதை தெளிவாக தெரிந்து கொண்டு படித்துவிட்டு வரும் காலங்களில் பதில் சொல்கிறேன் என கூறினார். கருணாஸின் இந்த பதில் திரைத்துறையினரை அதிர வைத்திருக்கிறது.

  • sivakarthikeyan movie cameraman ravi k chandran had chest pain திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்! 
  • Close menu