ராத்திரி குடிக்க போனேன்….அதுல கைவிட்டு – பட்டுனு போட்டு உடைத்த கருணாஸ்!

Author:
20 October 2024, 3:03 pm

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் குணசத்திர நடிகராகவும் நடித்து பின்னர் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தவர் தான் நடிகர் கருணாஸ். இவர் திரைப்படங்களில் மிகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து காமெடியின் மூலம் அனைவரது கவனத்தை ஈர்த்தார் கருணாம்.

இவர் நந்தா திரைப்படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அதை அடுத்து காதல் அழிவதில்லை, ஏப்ரல் மாதத்தில், பாபா, பேசாத கண்ணும் பேசும், வில்லன் , ஜெயா பாலா, புதிய கீதை, திருமலை , குத்து, காதலுடன், புதுக்கோட்டையில் இருந்து சரவணன், வசூல்ராஜா எம்பிபிஎஸ், அட்டகாசம், தேவதை கண்டேன் , கஸ்தூரிமான், கற்றது தமிழ், வில்லன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதை பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.

karunas

மேலும் இவர் இசையமைப்பாளராக ராஜாதி ராஜா மற்றும் அம்பாசமுத்திரம் அம்பானி, காசேதான் கடவுளடா உள்ளிட்ட படங்களுக்கு பணியாற்றி இருக்கிறார். அது தவிர அவர் பாடகராகவும் சென்னை 28 உள்ளிட்ட திரைப்படங்களுக்கு. சில பாடல்களை பாடி இருக்கிறார். சினிமாவை தாண்டி அரசியலிலும் தன்னை ஈடுபடுத்தி அதிலும் மும்முறமாக ஈடுபட்டு வருகிறார் நடிகர் கருணாஸ்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் கருணாஸிடம் தொகுப்பாளினி… உங்களோட மனைவி கிரேஸ் உங்களோட வாழ்க்கையில் ஆரம்பத்தில் இருந்து இருக்காங்க நீங்க சினிமா வாழ்க்கை ஆரம்பிக்கிறது முன்னாடி இருந்து ஒண்ணுமே நீங்க இல்லாமல் இருந்தபோதில் இருந்து உங்களோடு சேர்ந்து ட்ராவல் பண்ணிட்டு இருக்காங்க.

karunas-with-family

அவங்க உங்களுக்கு ஒரு பெரிய மாரல் சப்போர்ட்டா இருந்தது உங்களோட வாழ்க்கைக்கு உதவியிருக்கும் அதை பத்தி என்ன நினைக்கிறீங்க? என கேட்டதற்கு…. அவங்க என்னதான் நம்மளுக்கு சப்போர்ட்டா இருந்தாலும் கூட வாழ்க்கையில் நிறைய கமிட்மெண்ட்ஸ் இருந்தது. அந்த நேரத்தில் ஒரு பத்து ரூபா சம்பாதிச்சா கூட அது கையில நிக்காது .

ஒரு சம்பவத்தை சொல்றேன்…. நான் அந்த சமயத்துல கச்சேரி நடத்துவேன். அப்போ 5 ஆயிரம் எனக்கு அதுல இருந்து கிடைக்கும். அதுல பசங்களுக்கு ஆயிரம் ஆயிரம் பிரிச்சு கொடுத்துட்டு என் கைல ஒரு 1000 நிக்கும் . ஆனால் பசங்கள் எல்லோரும் அவங்க பணத்தை வாங்கி பாக்கெட்ல பத்திரமா எடுத்து சொருவி வச்சுப்பாங்க.

இதையும் படியுங்கள்: நானும் ஜெனிலியாவும்…. அது இன்னும் இருக்கு – Open’அ கூறிய ஜெயம் ரவி!

Karunas - Updatenews360

அன்னைக்கு நைட்டு வேற எதுவும் இல்லையா? வேற எதுவும் இல்லையா? என்று கேட்டுட்டு ஒயின்ஷாப்புக்கு கூட்டிட்டு போவாங்க. அங்க என்னோட அந்த ஆயிரம் ரூபாயும் செலவு பண்ணிட்டு அவங்களோட பணத்தை பத்திரமா எடுத்துட்டு போயிடு வாங்க. பொழுது விடிஞ்சா நான் ஒன்னுமே இல்லாம இருப்பேன். இப்படித்தான் என்னோட வாழ்க்கை ஆரம்பத்துல இருந்துச்சு என கருணாஸ் வெளிப்படையாக பேசி இருக்கிறார். வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து வெளிப்படையாக பேசினார்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 160

    0

    0