ஜோவிகாவுக்கு கெஞ்சி கூத்தாடி தான் வாய்ப்பு கிடைத்தது.. வனிதாவை வம்பு இழுத்த பிரபல நடிகை..!
Author: Vignesh19 October 2023, 1:14 pm
பிக்பாஸ் சீசன் 7 படு ஜோராக துவங்கி பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வனிதா மகள் ஜோவிகாவுக்கு ஆரம்பம் முதல் மக்களின் பேராதரவு கிடைத்து வருகிறது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக, அம்மாவையே போன்றே தெளிவாக, புத்திசாலித்தனமாக இருப்பதாக பலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், தனக்கு படிப்பு வரவில்லை என்பதால், ஒன்பதாம் வகுப்பு வரை படித்தேன். பின்னர் நின்று விட்டேன் என ஜோதிகா தெரிவித்துள்ளார். நடிப்பில் ஆர்வம் இருந்ததால் டிப்ளமோ படித்து முடித்து இருக்கிறேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.
முந்தைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சீசனில் நடிகை வனிதா கலந்து கொண்ட போது பலரின் கவனத்தை ஈர்த்து அனைவரையும் மிரள வைத்தார். நிகழ்ச்சிக்குப் பின்பும் ரியல் வாழ்க்கையில் கடுமையான நடிகை என்று காட்டி வந்தார் வனிதா.
இதனிடையே, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அவரது மகள் ஜோவிகாவை அனுப்பி இருப்பது குறித்து கஸ்தூரி தற்போது விமர்சித்திருக்கிறார். அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்து பேசி கெஞ்சி கூத்தாடி தான் மகளுக்கு வாய்ப்பை வாங்கி கொடுத்து இருக்கிறார் வனிதா என்று நடிகை கஸ்தூரி விமர்சித்திருக்கிறார்.
மேலும், இதேபோல் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று கேள்வி எழுப்பிய கஸ்தூரி ஜோவிகா படிப்பு பற்றி பேசியதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.