ரெய்டு வரும் முன்னே, நெஞ்சுவலி வரும் உடனே.. செந்தில் பாலாஜி கைது குறித்து பிரபல நடிகை நக்கல்..!

Author: Vignesh
14 June 2023, 4:45 pm

கடந்த சில தினங்களுக்கு முன்பு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், மது பான பார்களில் சில முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததன் அடிப்படையில் தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜயின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.

மேலும் தமிழக அரசு ஒப்பந்ததாரர்கள் அலுவலகம் மற்றும் வீடுகள் உள்பட 40 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி துறையினரின் சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் வீட்டிலும்  சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் அமலக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 12 மணி நேரம் சோதனையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

அந்த சமயத்தில் அவருக்கு உடல் நிலை குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் பிரபல நடிகை மற்றும் அரசியல்வாதியாக இருக்கும் கஸ்தூரி, செந்தில் பாலாஜியின் கைது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

kasthuri shankar - updatenews360

அதில், புதிய பழமொழிகள்- கற்பனை நான் நான் நானே தான்..

பின்னே மண்டபத்துல யாரும் எழுதி குடுத்தாங்களா என்ன .

முற்பகல் கட் செய்யின் பிற்பகல் ரெய்டு விளையும். CurrentCut வரும் முன்னே, raid வரும் பின்னே. ரெய்டு வரும் முன்னே, நெஞ்சுவலி வரும் உடனே. Cont தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

  • Pushpa 2 Kissik song வசனமடா முக்கியம்…ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த புஷ்பா 2 “கிஸ்ஸிக்” பாடல் வீடியோ இதோ…!
  • Views: - 596

    1

    0