அமைதிப்படை படத்தில் அத்துமீறலா? சத்யராஜ் குறித்து நடிகை கஸ்தூரி ஓபன் டாக்..!

Author: Vignesh
24 November 2023, 6:42 pm

நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதால் மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடரப்பட்டது. திரிஷாவுக்கு ஆதரவாக பலரும் கருத்துக்கள் பதிவிட்டு வந்த நிலையில், மன்சூர் அலிகான் இன்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்நிலையில், த்ரிஷா விவகாரம் பூதாகரமான நிலையில் இருக்குற பிரச்சனை போதாதுனு பாடகி சின்மயி ராதாரவியை வம்புக்கு இழுத்தார். அதேபோல், நடிகை விசித்ரா தான் ஏன் படங்களில் 20 வருடமாக நடிக்கவில்லை என பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த டாஸ்கில் வெளிப்படையாக பேசி இருந்தார்.

தெலுங்கில் ஒரு ஹீரோ ஒருவர் என்னை அழைத்து “முதுகு தேய்த்துவிட வேண்டும் என்றால் என்னை ரூமுக்கு கூப்பிடுங்கள்” என்றார். ஆனால், தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து நடித்த போது அப்படி நடந்ததில்லை. அவர் போன்று சிறந்த மனிதர் இருக்க முடியாது. மிகவும் அன்பானவர் ரஜினிகாந்த் என்று ராதிகா ஆப்தேவும் தெரிவித்து இருந்தார்.

kasthuri shankar - updatenews360

இப்படியாக ஒவ்வொரு நடிகைகளும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்களை தைரியமாக தற்போது, தெரிவித்து வரும் நிலையில் நடிகை கஸ்தூரி அமைதிப்படை படத்தில் சத்யராஜுடன் நடித்தது குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், சத்யராஜ் சாருடன் அமைதிப்படை படப்பிடிப்பு மறக்க முடியாத அனுபவம் என்றும், அவரது அற்புதமான நடிப்பை நான் அருகில் இருந்து பார்த்தேன். படத்தில் உள்ள ஒவ்வொரு காட்சியும் மிகவும் அருமையாக உள்ளது. குறிப்பாக, அல்வா காட்சி என பதிவிட்டுள்ளார்.

  • Pathikichu Song Release விடாமுயற்சி பொங்கல் கொண்டாட்டத்திற்கு எண்டே கிடையாது…படத்தின் அடுத்த பாடல் ரெடி ஆட ரெடியா…!