வானதி கிட்ட தோத்த காண்டு… ஒத்த வார்த்தையில் மொத்த அரசியலும்… விக்ரம் படத்தின் பத்தல பத்தல பாடல் குறித்து கஸ்தூரி விமர்சனம்..!!
Author: Udayachandran RadhaKrishnan11 May 2022, 11:18 pm
சென்னை : கமல் நடித்துள்ள விக்ரம் படத்தின் பாடல் வெளியான நிலையில் நடிகை கஸ்தூரி விமர்சித்து பதிவிட்டுள்ள ட்விட் வைரலாகி வருகிறது.
நடிகரும், மக்கள் நீதி மய்யக் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக எம்எல்ஏ வானதியிடம் தோல்வியடைந்தார்.
கட்சி ஆரம்பித்து பெரும் செல்வாக்கு பெரும் என எண்ணியிருந்த நிலையில் கடந்த தேர்தலில் படுதோல்வியை கண்டது கமல்ஹாசனுக்கு பெரும் பின்னடைவை சந்தித்தது.
இதையடுத்து அரசியல் சம்மந்தமாக அவ்வப்போது விமர்சனம் செய்து வரும் கமல்ஹாசன், தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த 3 வருடங்களாக கமல் எந்த படங்களிலும் கமிட் ஆகாத நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துள்ளார்,.
ஜூன் 3ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் இன்று வெளியான முதல் பாடல் பத்தல பத்தல என்ற பாடல் வெளியானது. அதில் ஒன்றியத்தின் தப்பாவே ஒன்றும் இல்ல இப்பாலே என்ற பாடல் வரிகள் மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்யும் வகையில் அமைந்திருந்தது.
இந்த நிலையில் இது குறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, சகலகலாவல்லவன்+மார்க்கண்டேயன் = கமல். வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் lyricsல இறக்கிட்டாப்ல. ஒன்றியம் ங்குற ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல. கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு! என விமர்சனம் செய்துள்ளார். இவரின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
0
0