அனிருத்தை பின்னுக்கு தள்ளிய 20 வயது இளைஞன் :இந்த வருடம் அதிகம் பேர் கேட்ட பாடல் எது தெரியுமா..!
Author: Selvan9 December 2024, 6:40 pm
தமிழ் சினிமாவில் பல தலைமுறைகளாக இசையின் சிம்மாசனத்தில் ஒருவருக்கொருவர் ஆட்சி செய்து வருகின்றனர்.இளையராஜாவில் தொடங்கி ஏ ஆர் ரஹ்மான் வரை,அவர்களின் இசையால் மக்களை மயக்கி வருகின்றனர்.தற்போது இருக்கக்கூடிய கலாச்சாரத்திற்கு ஏற்ப அனிருத் இசையில் உச்சத்தில் இருக்கிறார்.

ஆனால், தற்போது இந்த இசைச் சூழலின் திசையை மாற்றியமைக்க,ஒரு 20 வயது இளைஞன் அசுர வெற்றியைப் பெற்றுள்ளார்.
இந்த ஆண்டின் சென்சேஷனாக திகழும் இளம் இசையமைப்பாளர் அபினேயகர்,”கட்சி சேர” பாடல் மூலம் தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த இளைஞர்களையும் தனது பக்கம் இழுத்துள்ளார்.

சாய் அபயங்கரின் பாடலின் தனித்துவமான இசை மற்றும் பீட் ஒவ்வொருவரின் மனதையும் கவர்ந்தது.”கட்சி சேர” பாடல் அனிருத் பாடல்களையும் முந்தி, இசை ஸ்ட்ரீமிங் வெற்றியில் சாதனை படைத்துள்ளது.
இதையும் படியுங்க: எட்டிப்பார்த்த நபரை ஹீரோவா மாற்றிய பாரதிராஜா…மாஸ் ஹிட் ஆன படம்…!
சாய் அபயங்கரின் வெற்றி, தமிழ் இசை உலகில் புதிய ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. அவர் தொடர்ச்சியாக புதிய இசை பரிமாணங்களை தந்தால்,தமிழ் சினிமாவின் இசை வரலாற்றில் அவர் தனக்கென்று ஒரு இடத்தை பெறுவதில் சந்தேகம் இல்லை.
தற்போது இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 45 திரைப்படத்திற்கு இசையமைக்க போவதாக தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.