விருமாண்டி கெட்டப்பில் மிரட்டும் ஆர்யா… வெறித்தனமா வெளியான ‘காதர் பாட்சா’ Update!

Author: Shree
13 May 2023, 10:23 pm

இளம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆர்யா கட்டுமஸ்தான உடல் தோற்றம், மிரட்டலான body language என ஆரம்பத்தில் வில்லனாக நடித்து பரீட்சியமனார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது நடிப்பு திறமையை வளர்த்துக்கொண்டு முன்னணி ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார்.

2005ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஆர்யா தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஆர்யா இளம் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு அழகான ஒரு மகளும் இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.’ படத்தில் கரடுமுரடான கிராமத்து இளைஞனாக நடித்துள்ளார். இதில் விருமாண்டி படத்தில் கமல் நடித்தது போன்று மிரட்டலான தோற்றத்தில் இருக்கிறார். இப்படம் வரும் ஜுன் 2-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு தற்போது புதிய போஸ்டருடன் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து படத்தின் மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

  • Annamalai Warning About VijayTrisha Controversy விஜயுடன் திரிஷா சென்றால் தப்பா? சும்மா விட மாட்டேன் : பகிரங்க எச்சரிக்கை!
  • Views: - 455

    1

    0