செல்வ சீமாட்டியாய் வாழும் கத்ரீனா கைஃப் – முழு சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

Author: Rajesh
8 January 2024, 11:49 am

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான கத்ரீனா கைஃப் பாலிவுட்டில் கொடிகட்டி பறந்துக்கொண்டிருக்கிறார். இவர் பல்வேறு இந்தி படங்களில் நடித்து அந்த உச்ச அந்தஸ்தில் இருந்து வருகிறார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான அவர், மூன்று ஃபிலிம்பேர் பரிந்துரைகளுடன் கூடுதலாக நான்கு ஸ்க்ரீன் விருதுகள் மற்றும் நான்கு ஜீ சினி விருதுகள் உட்பட பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

Katrina Kaif - updatenews360

கத்ரீனா கைஃப்பின் அழகு மற்றும் நடிப்புக்கான வரவேற்பு வேறுபட்டிருந்தாலும், அவர் தனது அதிரடித் திரைப்படப் பாத்திரங்களுக்காகவும், பல்வேறு வெற்றிகரமான அவரது நடனத் திறனுக்காகவும் கோடிக்கணக்கில் ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார். இந்நிலையில் இவர் தற்போது தமிழ் நடிகர் விஜய் சேதுபதியுடன் merry christmas என்ற படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீராம் ராகவண் இயக்கியுள்ள இப்படம் தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்தை ராதிகா ஆப்தே, ரமேஷ், துரானி, சஞ்சய் ரவ்ட்ராய், ஜெயா துரானி, மற்றும் கேவல் கார்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கின்றனர். இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெபாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

vijay sethupathi katrina kaif

இந்நிலையில் நடிகை கத்ரீனா கைப்பின் முழு சொத்து மதிப்பு குறித்த விவரம் சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஒரு படத்திற்கே ரூ.10 முதல் 12 கோடி வரை சம்பளம் வாங்கும் கத்ரீனா கைப் மொத்தம் ரூ. 224 கோடி சொத்து வைத்திருக்கிறாராம். அத்துடன் அவர் Kay Beauty என்ற சரும பராமரிப்பு பொருட்கள் தயாரிக்கும் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். அதன் மதிப்பு ரூ 100 கோடி இருக்கும். இது தவிர பல கோடி மதிப்புள்ள பங்களா, சொகுசு கார்கள் என செல்வ சீமாட்டியாய் வாழ்ந்து வருகிறார் கத்ரீனா கைஃப்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 360

    0

    0