விஜய் சேதுபதி உடன் நடிக்க கத்ரீனா கைஃப் வாங்கிய சம்பளம் இவ்வளவுதானா.. உருட்டுனாலும் ஒரு நியாயம் வேண்டாமா..!

Author: Vignesh
20 January 2024, 2:07 pm

தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகரான விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், இளைஞர், முதியவர், கவுரவத் தோற்றம், கல்லூரி மாணவர், திருநங்கை உள்ளிட்ட பலவேறு வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பார்.

ஆரம்பத்தில் விஜய் சேதுபதி சறுக்கினாலும் பின்னர் அவரது திறமை அவரை மிகப்பெரிய உச்சத்தில் அமரவைத்துவிட்டது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து அறிமுகமான இவர் பீட்சா படத்தின் மூலம் பரீட்சயமானார்.

vijay sethupathi - updatenews360

தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரௌடி தான் , சேதுபதி , தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம் என பல ஹிட் படங்களில் நடித்து ஸ்டார் நடிகராக முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே இந்தியிலும் நடித்துள்ளார்.

இதனிடையே விஜய் சேதுபதி இந்தியில் பிரபல நட்சத்திர நடிகையான கத்ரீனா கைஃப் உடன் Merry Christmas என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்த மாதம் 12ம் தேதி வெளியானது.

த்ரில்லர் ஆக்ஷன் கதைக்களத்தில் வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில், மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடிக்க நடிகை கத்ரீனா கைஃப் ரூபாய் 15 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது 15 கோடி இல்லை 13 கோடி என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

  • ajith fans criticize ilaiyaraaja in strong words for giving notice to good bad ugly “இளையராஜா ஒரு பண பைத்தியம்”… தானாக ஆஜர் ஆகி அடிவாங்கும் அஜித் ரசிகர்கள்! ஏன் இப்படி?