அயோ எங்க மனசு சுக்குநூறா ஒடஞ்சிபோச்சு… கத்ரீனா கைஃப்பை மடியில் தூக்கி வச்சி கொஞ்சும் நடிகர்!

Author: Rajesh
5 January 2024, 7:51 pm

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான கத்ரீனா கைஃப் பாலிவுட்டில் கொடிகட்டி பறந்துக்கொண்டிருக்கிறார். இவர் பல்வேறு இந்தி படங்களில் நடித்து அந்த உச்ச அந்தஸ்தில் இருந்து வருகிறார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான அவர், மூன்று ஃபிலிம்பேர் பரிந்துரைகளுடன் கூடுதலாக நான்கு ஸ்க்ரீன் விருதுகள் மற்றும் நான்கு ஜீ சினி விருதுகள் உட்பட பாராட்டுகளைப் பெற்றுள்ளார் .

கத்ரீனா கைஃப்பின் அழகு மற்றும் நடிப்புக்கான வரவேற்பு வேறுபட்டிருந்தாலும், அவர் தனது அதிரடித் திரைப்படப் பாத்திரங்களுக்காகவும், பல்வேறு வெற்றிகரமான அவரது நடனத் திறனுக்காகவும் கோடிக்கணக்கில் ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார். இந்நிலையில் இவர் தற்போது தமிழ் நடிகர் விஜய் சேதுபதியுடன் merry christmas என்ற படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீராம் ராகவண் இயக்கியுள்ள இப்படம் தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்தை ராதிகா ஆப்தே, ரமேஷ், துரானி, சஞ்சய் ரவ்ட்ராய், ஜெயா துரானி, மற்றும் கேவல் கார்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கின்றனர். இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெபாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன்களில் மும்முரம் காட்டிக்கொண்டே கணவருடன் ஜில் அவுட் செய்துள்ள கத்ரீனா கைப் தற்போது கணவர் விக்கி கௌஷல் உடன் படு நெருக்கமாக எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்கள் அவரின் ரசிகர்களை வெறுப்புக்குள்ளாக்கியுள்ளது. விக்கி கௌஷல் பிரபல இந்தி நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 427

    0

    0