காற்றுக்கென்ன வேலி பிரபலத்துக்கு விரைவில் டும்டும்டும்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்து..!
Author: Vignesh26 May 2023, 2:50 pm
பெரும்பாலும் திரைப்படங்களை காட்டிலும் சின்னத்திரையான சீரியல்களே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. குடும்பங்களில் நடக்கும் நிகழ்வுகளை சீரியல்களில் இடம்பெற்றிருப்பதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
குறிப்பாக, கதைகளுக்கு ஏற்பட இல்லத்தரசிகளின் விருப்பமான சீரியல்களும் அமையும். ஹீரோயின்கள் மட்டுமல்ல வில்லி கதாபாத்திரங்களுக்கும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
அந்தவகையில், மிகவும் பிரபலமான சீரியல் காற்றுக்கென்ன வேலி என்னும் தொடர்தான்.
கல்லூரி கதையை மையமாகக் கொண்டுள்ள இந்த தொடருக்கு பெண்கள் மட்டுமல்ல ஆண்கள் கூட ரசிகர்களாக இருக்கலாம். இந்தத் தொடரில் இரு கதாநாயகிகள் உள்ளனர். காதல் மற்றும் குடும்ப நிகழ்வுகள்தான் இந்தத் தொடரின் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது.
இந்தத் தொடரில் நாயகிகளின் ஒருவரான வெண்ணிலா என்பவரின் தோழனாக நடித்து பிரபலமானவர் ஆகாஷ் என்ற கேரக்டரில் நடிகர் திலீப் நடித்து வருகிறார். இதில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவர் ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், engagement நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த செய்தி அறிந்த சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை திலீப் தம்பதிக்கு சொல்லி வருகின்றனர்.