பணக்கார குடும்பம்… 90 ரூபாய் சம்பளத்த நம்பி ரயில்வே வேலையை ராஜினாமா செய்த நாகேஷ்!
Author: Rajesh5 February 2024, 11:37 am
நகைச்சுவை மன்னன் நாகேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து காலத்தால் அழியாத நடிகையாக தனது முத்திரையை படைத்தார். மேலும் துணை நடிகர், வில்லனாகவும் சில படங்களில் நடித்திருக்கிறார்.
இதுவரை சுமார் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி லூயிஸின் போன்றே இருப்பதாக பரவலான கருத்து நிலவி வருகிறது. தமிழில் எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினி கமல், விஜயகாந்த், சூர்யா, சிம்பு, அஜித் வரை 5 தலைமுறை நடிகர்களுக்கும் தனது நடிப்பின் மூலம் பல ஹிட் படங்களை கொடுத்தவர் நாகேஷ். அந்த காலத்திலே B.sc பட்டப்படிப்பு படித்துள்ள நாகேஷ் கல்லூரி முடித்ததும் தனது தந்தை வேலைபார்த்த இரயில்வே துறையில் எழுத்தாளராகப் பணிபுரிந்தார்.
இந்நிலையில் நாகேஷ் குறித்து மறைந்த பிரபல எழுத்தாளர் வாலி பேட்டி ஒன்றில் நானும் நாகேஷூம் திரைத்துறையில் வந்த புதிதில் ரொம்ப கஷ்டப்பட்டோம். எங்கள் இருவருக்குமே பணக்கார பின்னணி கொண்ட குடும்பங்கள் தான் இருந்தது. ஆனாலும் இஷ்டப்பட்டு தான் இந்த துறையில் நாங்கள் கஷ்டப்பட்டோம். நாகேஷ் நடித்த ஒரு படம் தாமரைக்குளம். அதில் 2 காட்சிகள் மட்டுமே நடித்திருப்பான். அதற்காக அவனுக்கு கொடுத்த சம்பளம் வெறும் 90 ரூபாய் தான். இந்த சம்பளத்தை நம்பி நாகேஷ் தான் பார்த்துக்கொண்டிருந்த ரயில்வே வேலையை ராஜினாமா செய்துவிட்டு சினிமாவில் வந்து சாதித்தான் என கூறினார் கவிஞர் வாலி.