பிரம்மாண்டமாக நடைபெற்ற கவின் – மோனிகா திருமணம்.. வைரலாகும் திருமண போட்டோஸ்..!

Author: Rajesh
20 August 2023, 2:44 pm

கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகர் கவின். இதனைத் தொடர்ந்து, சரவணன் மீனாட்சி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிக பிரபலம் அடைந்தார். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

kavin -updatenews360

இதனைத் தொடர்ந்து, திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய கவின், நட்புன்னா என்னனு தெரியுமா என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 2019ம் ஆண்டு பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்றார். இதில் சக போட்டியாளரான லாஸ்லியாவுடன் காதல் சர்ச்சையில் இவரது பெயர் அடிபட்டது.

பின்னர் இந்நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் வெவ்வேறு பாதைகளில் சென்றுவிட்டனர். கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாடா திரைப்படம் இவருக்கு பெரும் வெற்றியை கொடுத்தது. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார் கவின். இதனிடையே கடந்த மாதம் கவின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியானது.

அதன்படி தனது நீண்ட நாள் காதலியான மோனிகா டேவிட் என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இன்று கவின் – மோனிகா டேவிட் திருமணம் சென்னையில் உள்ள பார்க் ஹயாட் ஓட்டலில் நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்தில் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். கவினின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ஏராளமான ரசிகர்களும் கவினுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…