நாங்க பிரிய இதுதான் காரணம்..! கவின் உடனான Breakup குறித்து முதல் முறையாக மனம் திறந்த லாஸ்லியா..!

Author: Vignesh
24 February 2023, 8:15 pm

லாஸ்லியா மரியனேசன் ( Losliya Mariyanesan ) இலங்கையைச் சேர்ந்தவர் இவர் தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். 2015 ஆம் ஆண்டு இலங்கையில் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்தார் .

losliya mariyanesan - updatenews360.png 2

அதன் பின்னர் தன் பணியில் இருந்து விலகி 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 என்ற பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

losliya mariyanesan - updatenews360

லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறவில்லை என்றாலும் மக்கள் மனதில் இடம்பிடித்தார். இவரின் அழகான இலங்கை தமிழால் தமிழ் மக்களை வெகுவாக கவர்ந்தார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கும் நடிகர் கவின் இருவரின் இடையே காதல் மலர்ந்தது. லாஸ்லியாவின் தந்தை காதலை எதிர்த்ததால் இருவரும் காதலை கைவிட்டதாக கூறப்பட்டது. பிக் பாஸ்சிலிருந்து வெளியேவந்தவுடன் தமிழ் படங்களில் நடிக்கத் துடங்கிய லொஸ்லியா கைவசம் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

losliya mariyanesan - updatenews360

2020 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த முதல் தமிழ் திரைப்படமான “பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியை அறிமுகமானார் .சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த திரைப்படம் சுமாரான விமர்சனத்தையே பெற்றிருந்தது. அதுதடுத்து படங்களில் பிஸி ஆகா நடித்துக்கொண்டிருக்கிறார்.

losliya mariyanesan - updatenews360

சோசியல் மீடியாக்களில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் லாஸ்லியா மரியனேசன், சமீபத்தில் பேட்டியில் காதல் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

இருவரும் வீட்டுக்குள் ஒன்றாக சுத்தியதாகவும், திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு தயாராகி வந்ததாகவும் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், வெளியே வந்ததும் பழகியதற்கான சுவடே தெரியாமல் இருவரும் பிரிந்து அவரவர் பாதையில் சென்று விட்டனர். இதனிடையே, லாஸ்லியா கவின் உடனான உறவு குறித்து முதன் முறையாக மனம் திறந்து தெரிவித்து உள்ளார்.

losliya mariyanesan - updatenews360

அதாவது வீட்டுக்குள் இருந்தவரை, தங்களுக்குள் ரிலேஷன்ஷிப் இருந்ததாகவும், அந்த சூழ்நிலைக்கு அந்த உறவு ஏற்றதாக இருந்தது என்றும், ஆனால் வெளியே வந்ததும் தங்களுக்கு புரிந்து விட்டது எனவும், இது கண்டிப்பாக செட்டாகாது என்று நினைத்து தான் இருவரும் பிரிந்து விட்டோம் என இதை ஓப்பனாக சொல்வதைப் பற்றி தனக்கு எந்த கவலையும் இல்லை எனவும், ஆனால் தனக்கும் கவினுக்கும் ரிலேஷன்ஷிப் இருந்தது உண்மை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். லாஸ்லியாவின் இந்த கருத்துக்கள் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

  • ajith viral speech இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!