பத்து ஆண்டுகளுக்கு மேல் தனது சினிமா மார்க்கெட்டை நிலை நிறுத்தி முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ஐயா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவருக்கு, முதல் படமே அமோக வரவேற்பை கொடுத்தது. சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து அசத்தலான நடிப்பையும் கவர்ச்சியும் வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்தார். என்னதான் நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும், ஜவான் படத்திற்கு பின்னர் தான் அவருடைய ரேஞ்சே வேற லெவலுக்கு சென்று விட்டது என்று சொல்லலாம். அவருக்கு பல பட வாய்ப்புகளும் தேடி வருகின்றதாம்.
முன்னதாக, கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக ஜொலித்து வரும் நயன்தாராவுக்கு ஆரம்பத்தில் இருந்தே பல கிசுகிசுக்கள் இருந்து வந்தது. அதாவது, சிம்பு மற்றும் பிரபுதேவா உடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கியதற்குப் பின் பேட்டிகள் கொடுப்பதிலும் பட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதிலும் நயன்தாரா தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், 39 வயதாகும் நயன்தாரா தற்போதும் இளம் நடிகைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில், உடலை பிட்டாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். முன்னதாக, நயன்தாரா அடுத்த லோகேஷ் கனகராஜ் உதவி இயக்குனர் விஷ்ணு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில், இவருக்கு ஜோடியாக தன்னைவிட வயது குறைந்த இளம் நடிகர் கவின் உடன் நடிக்க உள்ளார். அதுவரை படத்தின் போஸ்டர் ஒன்றில் நயன்தாராவுடன் கவின் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்பட வெளிவர எல்லோருக்கும் செம ஷாக். இந்நிலையில், நயன்தாராவின் ரசிகர்கள் தயவு செஞ்சு முத்த காட்சி மட்டும் வச்சிராதீங்க எங்க மனசு தாங்காது என்று கமெண்ட்களில் குமுறி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ வெளியாகி கடந்த ஒரு வாரமாகவே டிரெண்டிங்கில் உள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
This website uses cookies.