கோடிகளில் சம்பளம் கேட்குறீங்களாமே.. – பதறிப்போய் கவின் சொன்ன பதில்..!

Author: Vignesh
3 May 2024, 5:56 pm
kavin
Quick Share

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான கவின் ஆரம்பத்தில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து மக்களுக்கு அறிமுகம் ஆனார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்த கவின் லிப்ட் திரைப்படத்தில் நடித்து முகம் அறியப்பட்டார். அதன் பிறகு டாடா திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தார். இந்த திரைப்படத்தை அவரின் கல்லூரி நண்பரான கணேஷ் கே.பாபு என்பவர் இயக்கினார்.

kavin -updatenews360

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கவினுக்கு தொடர்ந்து அடுத்தடுத்த படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது சம்பளத்தை ரூ. 1 கோடியாக நடிகர் கவின் உயர்த்தினாராம். இதன்பின், இவருடைய சம்பளம் ரூ. 3 கோடி என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ரூ. 7 கோடியாக உயர்த்திவிட்டாராம். ஒரே ஒரு படம் ஹிட் ஆனதும் கவின் இப்படி மாறிவிட்டாரே என சினிமா வட்டாரத்தில் விமர்சித்தும் வந்தனர்.

kavin -updatenews360

இந்த நிலையில், சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் கவின் கலகலப்பு 3 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், இயக்குனர் தரப்பில் இது குறித்து மறுக்கப்பட்டுள்ளது. தற்போது, கவின் நடிக்க இருக்கும் புதிய படம் ஒன்றில் இரண்டு கோடியிலிருந்து ஆறு கோடி ரூபாய் வரை அவர் சம்பளம் கேட்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனை கேட்ட தயாரிப்பாளர்கள் ஆள விடுடா சாமி இனிமே சத்தியமா உங்கிட்ட வர மாட்டேன் என்று ஒரு கும்பிடு போட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: பிரபல நடிகையுடன் வருட கணக்கில் ரகசிய உறவு?.. KS ரவிக்குமார் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்..!

மேலும், தற்போது ஸ்டார் படத்தில் நடித்து வரும் கவின் பிரபல இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் இருக்கும் படத்திலும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறாராம்.

kavin -updatenews360

மேலும் படிக்க: 2 கல்யாணம்.. 2 விவாகரத்து.. பிரபல நடிகையின் ரகசியத்தை புட்டு புட்டு வைத்த பயில்வான்..!

இந்நிலையில், கோடிகளில் சம்பளம் கேட்பதாகவும் சிறு தயாரிப்பாளர்களிடம் கவின் பேச சிரமப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, பதிலளித்த கவின் எனக்கும் தயாரிப்பாளருக்கும் தான் விவாதமாக இருக்கும், நான் கேட்கிறேன் என்பதற்கு அதையே கொடுக்க மாட்டார்கள்.

kavin

மேலும் படிக்க: பிரபல நடிகையால் சுந்தர் C குடும்பத்தில் வெடித்த சண்டை.. கடுப்பில் கத்திய குஷ்பூ..!

நீங்கள் எந்த பத்திரிகையாளர்கள் என்று எனக்கு தெரியாது. இதற்கு முன்னாடி வேலை செய்யும் இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு வேலைக்கு செல்லும்போது அதே சம்பளத்தை கேட்க மாட்டோம். அதிகமாக தான் கேட்போம் அதையும் தீர்மானிப்பது முன்னாடி வாங்கிய சம்பளம் தான் தீர்மானிக்கும். சீரியலில் நடிக்கும் போது ஆயிரம் ரூபாயும் அதன்பின்னர் ஐந்தாண்டுகளுக்கு பின்னர் என் சம்பளம் 6000 ரூபாய் சம்பளம் என்பது நாம் படம் எவ்வளவு மார்க்கெட் பெறுகிறது என்பதை தீர்மானிக்கிறதே தவிர தனிப்பட்ட முறையில் யாரும் தீர்மானிப்பது இல்லை.

kavin -updatenews360

இதுதான் என்னோட நாலாவது படம் இதை முடிக்கவே ஒரு வருடம் ஆகிவிடும். இந்த காரணத்திற்காக தான் நான் சில படங்களுக்கு நோ சொல்லி இருக்கிறேன். ஆனால், நோ சொல்வதற்கு முக்கிய காரணம் யாரையும் காத்திருக்க வைக்க வேண்டாம் என்று நினைத்து எவ்வளவு பேர் இருக்கிறார்கள் அவர்களை வைத்து எடுத்துக் கொள்ளட்டும். இதெல்லாம், தான் காரணம் சுவாரசியத்திற்காக பேசுவதற்கு நன்றாகத்தான் இருக்கும் இதுதான் உண்மை என்று கவின் தெரிவித்துள்ளார்.

Views: - 107

0

0