“டாடா”அனைவரும் பார்க்க வேண்டிய படம்: அடுத்த அஜித் கவின் தான் அடித்து சொல்லும் பயில்வான்..!

Author: Vignesh
9 February 2023, 7:00 pm

கல்லூரியில் இறுதி ஆண்டு மணிகண்டன் (கவின்) மற்றும் சிந்து (அபர்ணா தாஸ்) ஆகியோர் படிக்கிறார்கள். காதலர்களான இவர்கள் வாழ்வில் நினைக்காத விஷயம் நடக்கிறது. எதிர்பாராவிதமாக சிந்துவை கர்ப்பமாக்கிவிடுகிறார் கவின். இதையடுத்து, இளம் வயதில் கவின் தந்தையாகிவிடுகிறார்.

dada - updatenews360

பின்னர், நண்பரின் வீட்டில் சேர்ந்து வாழ முடிவு செய்கிறார்கள் கவினும், அபர்ணா தாஸ்வும். சிந்து கர்ப்பமாக இருக்கும்போது மணிகண்டன் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதால், இவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு, பின்னர் குழந்தை ஆதித்யாவை தனி ஆளாக வளர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார் கவின். பண பிரச்சனைக்கு நடுவே பல பிரச்சனைகளுக்கு இடையே குழந்தையை எஃஷப்படி வளர்க்கிறார் கவின் என்பதை கணேஷ் கே. பாபு மிகவும் அழகாக காட்டியிருக்கிறார். செய்த தவறை உணர்ந்து திருந்தும் கவின் திருந்துகிறார்.

dada - updatenews360

ஹீரோ கவின் ரொம்ப நல்லவர் எல்லாம் இல்லை. ஆனால் கவின் தன்னை திருத்திக் கொள்ளும் விதம் நம்மை கவர்கிறது என்றும், சீரியஸான கதையில் காமெடியை சரியான அளவு கலந்து கொடுத்து இயக்குனர் அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார்கள். அந்த காமெடி பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும் என பயில்வான் தெரிவித்துள்ளார்.

dada - updatenews360

கவினின் நடிப்பு அருமை என்றும் அடுத்த அஜித் கவின் என்று பயில்வான் தெரிவித்துள்ளார். எதற்கும் கவலைப்படாதவர், அழாதவர் என கவின் என்றும், அவரை அறிமுகம் செய்து வைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் கண்ணில் கண்ணீரை பார்த்தபோது போலியாக தெரியவில்லை என்றும், மாறாக தியேட்டரில் இருந்தவர்களின் கண்களும் கலங்கிவிட்டது என தெரிவித்துள்ளார்.

dada - updatenews360

பல இடங்களில் கண்ணீருடன் வந்த அபர்ணா தாஸ் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் என்றும், கவின், அபர்ணா தாஸ் இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகிவிட்டது என பயில்வான் தெரிவித்துள்ளார். இவர்களின் கெமிஸ்ட்ரி படத்தின் மீதான சுவாரஸ்யத்தை கூட்டுகிறது எனவும், ஒளிப்பதிவும் சரி, இசையும் சரி படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது என ஜென் மார்டினின் பிஜிஎம் அருமை என பாராட்டி உள்ளார்.

dada - updatenews360

சரியான அளவில் எமோஷன், காதல், பாசம், காமெடியை கலந்து கொடுக்கப்பட்ட அழகான படம் டாடா என்று பயில்வான் பேசியுள்ளார். மேலும் அவர் இந்த காலத்து தலைமுறையினர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் டாடா என்றும் தெரிவித்துள்ளார்.

  • Eiffel Tower Fire Incident நயன்தாரா-விக்னேஷ் சிவன் சென்ற “ஈபிள் டவரில்”பற்றி எறிந்த தீ…அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்!
  • Views: - 985

    3

    1