கிஸ்ஸில் ஆர்வம் காட்டும் கவின்.. இந்த தடவ மிஸ் ஆகாது..!

Author: Selvan
12 November 2024, 6:32 pm

சின்னத்திரை to வெள்ளித்திரை

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நிறைய பேர் வந்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் கவின் லிப்ட் திரைப்படம் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு அடியெடுத்து வைத்தார் .

இவர் முன்னதாக பிக் பாஸ் சீசனில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.இவருடைய முதல் படமான லிப்ட் படம் வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தன.

kavin failure movie

இதையும் படியுங்க: எனக்கு ஆண்மை இல்லையா..பத்திரிக்கையாளர் சொன்ன தகவலுக்கு பதிலடி கொடுத்த அஜித் ..!

அந்த வரிசையில் அவர் நடித்த டாடா திரைப்படம் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது,அதில் மனைவியை பிரிந்து ஒரு குழந்தைக்கு அப்பாவாக நடித்திருப்பார்.அடுத்து அவர் நடித்த ஸ்டார் திரைப்படமும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கடந்த தீபாவளி அன்று வெளியான பிளடி பெக்கர் திரைப்படம் எதிர்பாத்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.படமும் மக்கள் மத்தியில் நிறைய விமர்சனத்துக்கு ஆளானது.இப்படத்தை இயக்குனர் நெல்சன் தயாரித்திருப்பார்.

கவினின் அடுத்த பட தகவல்கள்

இந்நிலையில் தற்போது சதீஷ் மாஸ்டர் இயக்கத்தில் கிஸ் படத்தில் நடித்து வருகிறார். பிளடி பெக்கர் படத்தின் மோசமான தோல்வியை அடுத்து கவின்,தன்னுடைய அடுத்த படத்தை மிகச் சிறப்பாக ரசிகர்களை கவரும் வகையில் கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.

kavin upcoming movie update

தற்போது கிஸ் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த தடவ மிஸ் ஆகாது…ரசிகர்ளுக்கு ஒரு சிறந்த படமாக கிஸ் திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்பதை அவர் திட்டமிட்டுள்ளார்.

அடுத்தடுத்து கவின் நடிப்பில் கிஸ், மாஸ்க், ஹை என மூன்று படங்கள் உருவாகி வருகின்றன. இந்த படங்கள் அவரை மீண்டும் தமிழ் சினிமாவில் உச்சத்தை கொண்டு வைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 222

    1

    0