கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகர் கவின். இதனைத் தொடர்ந்து, சரவணன் மீனாட்சி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிக பிரபலம் அடைந்தார். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
இதனைத் தொடர்ந்து, திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய கவின், நட்புன்னா என்னனு தெரியுமா என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 2019ம் ஆண்டு பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்றார். இதில் சக போட்டியாளரான லாஸ்லியாவுடன் காதல் சர்ச்சையில் இவரது பெயர் அடிபட்டது.
பின்னர் இந்நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் வெவ்வேறு பாதைகளில் சென்றுவிட்டனர். கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாடா திரைப்படம் இவருக்கு பெரும் வெற்றியை கொடுத்தது. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார் கவின். இதனிடையே கடந்த மாதம் கவின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியானது.
அதன்படி தனது நீண்ட நாள் காதலியான மோனிகா டேவிட் என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இன்று கவின் – மோனிகா டேவிட் திருமணம் சென்னையில் உள்ள பார்க் ஹயாட் ஓட்டலில் நடைபெற்றுள்ளது.
இந்த திருமணத்தில் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். கவினின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ஏராளமான ரசிகர்களும் கவினுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் தனது சோகமான புகைப்படத்தை பதிவிட்டு லாஸ்லியா என்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை என்ற கேப்சன் போட்டிருக்கிறார்.
மேலும், கவின் லாஸ்லயா இருவருக்குமே தோழியாக இருந்த மோனிகாவை தான் திருமணம் செய்துள்ளார். அவர்கள் திருமணம் செய்த நேரத்தில் யாராலும் காப்பாற்ற முடியாது என ஸ்டேட்டஸ் வைத்திருந்தார் லாஸ்லியா. அதைத் தொடர்ந்து இன்று கவின் மனைவி மோனிகா நான் கவினின் அதிகாரப்பூர்வ மனைவியாகிவிட்டேன் என ஸ்டேட்டஸ் வைக்க என்ன லாஸ்லியாவிற்கு பதிலடியா என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…
This website uses cookies.