எனக்காக நீங்கள் அடிக்கும்.. கனவுக்கன்னி கயாடு வீடியோ பகிர்வு!
Author: Hariharasudhan28 February 2025, 10:57 am
எனக்கு தமிழ் தெரியாத நிலையிலும், எனக்கு நீங்கள் அளிக்கும் அன்பு விலைமதிப்பற்றது என நடிகை கயாடு லோஹர் வீடியோ வெளியிட்டு கூறியுள்ளார்.
சென்னை: இது தொடர்பாக தற்போது ரசிகர்களின் பேரன்போடு இருக்கக் கூடிய நடிகை கயாடு லோஹர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “எனக்கும், டிராகன் படத்துக்கும், இந்த பல்லவிக்கும் கிடைக்கும் அன்பும் ஆதரவும் உணர்வுப்பூர்வமானது.
தியேட்டரில் நீங்கள் எனக்காக அடிக்கும் விசில், இன்ஸ்டாவில் நீங்கள் எனக்காக செய்யும் ரீல்ஸ், அழகான கமென்ட்கள் என அனைத்தையும் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் தமிழ்ப் பொண்ணு கிடையாது. எனக்கு தமிழும் தெரியாது. ஆனால், எனக்கு நீங்கள் அளிக்கும் அன்பு விலைமதிப்பற்றது.
இதற்கு ஈடாக அன்பைத் திருப்பித் தரும் வகையிலேயே என் படங்கள் இருக்கும். நீங்கள் பெருமைப்படும் வகையில் நான் நடந்துகொள்வேன்” எனத் தமிழிலேயே பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோவை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே, கயாடு லோஹரின் போட்டோ, வீடியோக்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வரும் நிலையில், அந்த லிஸ்ட்டில் இதுவும் இப்போது சேர்ந்துள்ளது.
யார் இந்த கயாடு லோஹர்: சமீபத்தில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் படம் வெளியாகி வெற்றி பெற்றதை அடுத்து, அதில் நடித்த கயாடு லோஹர் சமூக வலைத்தளங்களில் பெரும் சென்சேஷன் ஆகியுள்ளார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கயாடு லோஹர், 2021ஆம் ஆண்டில் வெளியான முகில்பெடெட் என்ற மலையாளப் படத்தில் அறிமுகம் ஆனார்.
இதையும் படிங்க: 2 நாளுக்கு முன்னாடி கூட ஆள் அனுப்புனாரு சீமான்.. விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ!
பின்னர், 2022ஆம் ஆண்டில் வெளியான அல்லுரி என்ற தெலுங்கு படத்தில் ஸ்ரீவிஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த நிலையில், ‘டிராகன்’ படம் அவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியுள்ளது. குறிப்பாக, தமிழ் மற்றும் தெலுங்கில் அதிகம் தேடப்படும் நடிகையாகவும் கயாடு மாறியுள்ளார்.