கல்யாணம் பண்ணிட்டா அதெல்லாம் கூடாதா?.. கோபத்தில் கொந்தளித்த கீர்த்தி பாண்டியன்..!
Author: Vignesh15 December 2023, 5:00 pm
திரைப் பிரபலங்களின் தனிப்பட்ட மற்றும் அந்தரங்க விஷயங்கள் குறித்து தொடர்ந்து பேசி வருபவர் பயில்வான். இவர் பேசும் வீடியோவை பார்த்து பலர் கண்டித்து கருத்துக்களை தெரிவித்து வந்து சண்டை போட்டு வந்தனர். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட கீர்த்தி பாண்டியனையும் வம்புக்கு இழுத்தார்.
பயில்வான் முன்னதாக சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட அசோக் செல்வனின் மனைவி கீர்த்தி பாண்டியனிடையே, போட்டி நிலவுவதாக செய்திகள் வெளியானது. அதற்கு காரணம் அசோக் சொல்வன் நடித்த சபாநாயகன் படம் கீர்த்தி பாண்டியன் நடித்த கண்ணகி படம் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது தான் காரணமாக சொல்லப்பட்டது.
படம் இரு நாட்களில் வெளியாக உள்ள நிலையில், கண்ணகி படத்தின் பிரஸ்மீட் சமீபத்தில் நடந்தது. அப்போது, பயில்வான் ரங்கநாதனும் அதில், கலந்து கொண்டு இடையில் குறுக்கிட்டு கீர்த்தி பாண்டியனிடம் எடக்கு முடக்கான கேள்விகளை கேட்டிருந்தார்.
அதாவது, கண்ணகி நல்லவளா கெட்டவளா என்று படத்தின் இயக்குனரிடம் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு இயக்குனர் பதில் அளிக்க படத்தை பார்த்து தான் தெரியும். பொது கருத்து நிறைய இருக்கு என்று தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து பேசிய பயில்வான், வீட்டில் தான் கணவன் மனைவி சண்டை என்றால், இப்பவும் இந்த வாரம் உங்க கணவர் படம் ரிலீஸ் ஆகுது எந்த படம் ஜெயிக்கும் என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு கீர்த்தி பாண்டியன் சார் நீங்க எங்க வீட்டுக்கு வந்து பாத்தீங்களா நாங்க சண்டை போட்டது. எங்களுக்குள்ள போட்டியும் இல்லை, சண்டையும் இல்லை. ரெண்டுமே வெற்றி பெறனும் எங்க வீட்டுக்காரர் படத்தை பார்த்து விட்டார். நல்லா இருக்குன்னு சொன்னாரு என்று கீர்த்தி பாண்டியன் தெரிவித்திருந்தார். அப்படி பேசியதும் அடுத்த நிமிடமே பயில்வான் அந்த இடத்தில் இருந்து விலகி விட்டார்.
இதனை தொடர்ந்து, வேறொரு பேட்டியொன்றில், திருமணமாகிவிட்டதால் தொடர்ந்து இனிமேல் படத்தில் நடிப்பீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டதற்கு அவர், நடிப்பும் ஒரு தொழில், இதை மட்டும் கல்யாணம் ஆகிட்டா செய்யக்கூடாதா? திருமணமான பின் தொடர்ந்து நடித்தால் என்ன பிரச்சனை? இந்த கேள்வியை அசோக் செல்வனிடம் கேட்க முடியுமா என்றும், ஆண்கள் திருமணம் செய்துவிட்டு நடிக்கலாம். ஆனால், நடிகைகள் மட்டும் நடிப்பது என்ன பிரச்சனை இருப்பதாக பார்க்கிறீர்கள் என்று கீர்த்தி பாண்டியன் பதிலடி கொடுத்து இருக்கிறார்.