அந்த இடத்தில் கை வைத்து அத்துமீறல்.. கசப்பான அனுபவத்தை வெளியிட்ட அசோக் செல்வனின் மனைவி..!
Author: Vignesh18 December 2023, 1:45 pm
நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது. அந்த படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்குடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இருவரது கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தது.
இவர்கள் நிஜத்தில் காதலித்தால் கூட சிறந்த ஜோடியாக இருப்பார்கள் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அசோக் செல்வனுக்கு பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்டார். கீர்த்தி பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலியில் இயற்கை சார்ந்த முறையில் நடைபெற்ற இத்திருமணம் பலரது கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னெவன்றால், கீர்த்தி பாண்டியன் நடிப்பில் கண்ணகி திரைப்படம் கடந்த 15ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அம்மு அபிராமி, ஷாலின் சோயா, வித்யா பிரதீப் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ரசிகர்கள் இந்த படத்திற்கு கலைவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர். இதனிடையே, சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கீர்த்தி பாண்டியனிடம் நீங்கள் பஸ்ஸில் செல்லும்போது உங்கள் மீது அத்துமீறி கை வைத்த சம்பவங்கள் நடந்துள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், பெண்கள் என்றாலே அந்த மாதிரியான விஷயங்களை கடந்து தான் வந்திருப்பார்கள் எனக்கும் இப்படியான விஷயங்கள் நடந்து இருக்கிறது. நான் சினிமாவில் இருந்தாலும் அதற்கு முன்பாக இருந்தாலும் எனக்கு தெரியாத ஊருக்கு சென்றாலும் தப்பான விஷயங்கள் நடந்திருக்கிறது என்று மூடி மறைத்து கீர்த்தி பாண்டியன் சில விஷயங்களை பேசி உள்ளார்.