அசோக் செல்வனிடம் தாலி கட்ட சொன்ன பொண்ணு – கீர்த்தி பாண்டியனின் ரியாக்ஷன் கொஞ்சம் பாருங்க!

Author: Rajesh
2 February 2024, 12:59 pm

நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது. அந்த படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்குடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இருவரது கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தது.

இவர்கள் நிஜத்தில் காதலித்தால் கூட சிறந்த ஜோடியாக இருப்பார்கள் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அசோக் செல்வனுக்கு பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்டார். கீர்த்தி பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலியில் இயற்கை சார்ந்த முறையில் நடைபெற்ற இத்திருமணம் பலரது கவனத்தை ஈர்த்தது.

ashok selvan

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னெவன்றால், அசோக் செல்வனின் தீவிர ரசிகை ஒருவர் நிகழ்ச்சியின்போது அசோக் செல்வனிடம் தாலி கட்டி சொல்லி Propose செய்தார். அது மட்டும் அல்லாமல் அவருக்கு பிடித்த மீன் குழம்பு கூட செய்வேன் என்றேல்லாம் கூறினார். நான் அந்த பொண்ணு பத்தி கூட எதுவும் நினைக்கல இவன் செமயா மாட்டிக்கிட்டானே என்று தான் நினைத்தேன். அந்த பெண் மிகவும் genuine ஆக நடந்துக்கொண்டது எனக்கு மிகவும் பிடித்திருந்தது என கூறினார் கீர்த்தி பாண்டியன். அந்த சமயத்தில் இவர்கள் இருவரும் ரகசியமாக காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?