ஈரமான தலைமுடி ஸ்லீவ்லெஸ் உடை விருந்து வைத்த கீர்த்தி சுரேஷ் !

Author: Udayachandran RadhaKrishnan
16 June 2022, 3:05 pm

கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது அண்ணாத்த, மோகன்லால் அவர்களுடன் நடித்த மரக்காயர் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று உள்ளது. தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்தார், மக்கள் மத்தியில் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

மேலும், அண்மையில் இவர் நடிப்பில் வந்த ‘குட் லக் சகி படம்’ கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது சீரஞ்சீவி நடிப்பில் உருவாகிவரும் ‘போலே சங்கர், மலையாளத்தில் டொவினோ தாமஸின் ‘வாஷி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Sarkaru Vaari Paata படத்தின் பாடல் ஒன்றில், கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான உடையில் விபரீதமான கவர்ச்சியை காட்டி வியாபாரம் செய்துள்ளார். ஈரமான தலைமுடி ஸ்லீவ்லெஸ் உடை என ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.

  • Sawadeeka Song Lyric Video Releaseபோடுங்கடா ஆட்டத்த..சொன்ன மாதிரி சொல்லி அடித்த அஜித்..”Sawadeeka”லிரிக் வீடியோ வெளியீடு..!
  • Views: - 688

    1

    0