துள்ளி குதித்து ஓடும் வெண்ணிலா – தசரா வெற்றி குஷியில் கீர்த்தி – வீடியோ!

Author: Shree
31 March 2023, 8:05 pm

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் நானிக்கு ஜோடியாக தசரா படத்தில் நடித்திருந்தார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் நேற்று வெளியான இப்படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியிருந்தார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் ஓரளவு ரசிகர்களின் ஆதரவுடன் வசூல் ஈட்டி வருகிறது இந்நிலையில் படம் வெற்றியடைந்துள்ளதாக கீர்த்தி சுரேஷ் உச்சகட்ட மகிழ்ச்சியில் தசரா வெண்ணிலாவாக துள்ளி குதித்து ஓடும் விடியோவை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

மேலும், இப்படம் இந்தியாவில் மட்டுமே முதல் நாள் 38 கோடிகள் அள்ளியுள்ளது. உலகெங்கும் 48 கோடிகளுக்கு அருகில் வந்துள்ளது. அமெரிக்காவில் 2 நாட்கள் முடிவில் 1 மில்லியன் டாலர்கள் கலெக்ஷனில் சேர்ந்துள்ளது. நானிக்கு இப்படம் மிகப் பெரிய ஒப்பனிங்கை தந்துள்ளதோடு கீர்த்தி சுரேஷின் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

https://www.instagram.com/p/Cqc5RIYvbeL/

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ