கேரளாவை பூர்விகமாக கொண்டவரான கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
பின்னர் இது என்ன மாயம் திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியான நடித்து பிரபலமானார். தொடர்ந்து ரஜினி முருகன் , தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே விஜய்யை கீர்த்தி சுரேஷ் ரகசியமாக காதலித்து வருவதாகவும் சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டு விஜய் கீர்த்தி சுரேஷை திருமணம் செய்யப்போவதாகவும் வதந்திகள் வெளியாகி வருகிறது.
இது குறித்து பேட்டி ஒன்றில் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகாவிடம் கேட்டதற்குசினிமாவை பொறுத்த வரை கிசுகிசுக்கள் எழுவது சகஜமான ஒன்று தான். கீர்த்தி சுரேஷ் உண்மையில் காதலித்தால் எங்களுடன் சொல்லப்போகிறார்” என்று செம கூலாக கூறியுள்ளார். கீர்த்தி சுரேஷ் தற்போது நானியுடன் தசரா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள “மைனர் வேட்டி கட்டி”பாடல் சூப்பர் ஹிட் ஆகிவருவது குறிப்பிடத்தக்கது.