ஒரு மாசத்துக்கு ஒருத்தரு… திருமணம் ஆன நடிகருடன் ரைடு சென்ற கீர்த்தி சுரேஷ் ( வீடியோ )
Author: Shree23 September 2023, 1:31 pm
கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இதனிடையே தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மிட் தோற்றத்திற்கு மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, தமிழ் என படு பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே அவ்வப்போது காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது இவர் பிரபல பாலிவுட் நடிகரான வருண் தவான் உடன் ஆட்டோவில் ரைடு சென்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்ஸ் ஒருவேளை அப்படி இருக்குமோ? என சந்தேகித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ:
❤️ @KeerthyOfficial @Varun_dvn #KeerthySuresh #VarunDhawan pic.twitter.com/XB3qJ0PP93
— Trends Keerthy (@TrendsKeerthy) September 22, 2023